Advertisment

மதுரை – சென்னை எழும்பூர் அதிவிரைவு ரயில் ரத்து; தெற்கு ரயில்வே அறிவிப்பு

மதுரை – சென்னை எழும்பூர் அதிவிரைவு ரயில் இருமார்க்கத்திலும் ரத்து; பராமரிப்பு பணிகள் காரணமாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு

author-image
WebDesk
New Update
sub urban train

பராமரிப்பு பணிகள் காரணமாக மதுரை – சென்னை எழும்பூர் அதிவிரைவு ரெயில் சேவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

Advertisment

இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது; தெற்கு ரயில்வே மதுரை கோட்டத்திற்கு உட்பட்ட ரயில் நிலையங்கள் மற்றும் ரயில் தண்டவாளங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பராமரிப்பு பணிகள் காரணமாக சில ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக மதுரை – சென்னை எழும்பூர் அதிவிரைவு ரயில் சேவை ரத்து செய்யப்படுகிறது.

அதன்படி, இன்று செப்டம்பர் 5 ஆம் தேதி இரவு 8.50 மணிக்கு மதுரையில் இருந்து சென்னை புறப்படும் ரயிலும் (வண்டி எண்: 22624), அதேபோல், நாளை செப்டம்பர் 6 அன்று இரவு 10.05 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து மதுரைக்கு புறப்படும் ரயிலும் (வண்டி எண்: 22623) ரத்து செய்யப்படுகிறது. 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Chennai Tamilnadu Southern Railway Train
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment