ரயில் பாதை பராமரிப்பு பணிகள் காரணமாக நெல்லையிலிருந்து திருச்செந்தூர் வரை இயக்கப்படும் முக்கிய பயணிகள் ரயில் 25 நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது;
திருநெல்வேலி - திருச்செந்தூர் இடையே தினமும் மாலை 4:30 மணிக்கு இயக்கப்படும் ரயிலும், திருச்செந்தூர் – திருநெல்வேலி இடையே காலை 10.10 மணிக்கு இயக்கப்படும் ரயிலும் வருகின்ற மார்ச் 20 முதல் 8 முதல் ஏப்ரல் 13ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.
நெல்லை சந்திப்பு ரயில் நிலையம் அருகே இரண்டாவது யார்டு பகுதியில் பிட் லைன் தண்டவாளம் புதுப்பிக்கும் பணிகளுக்காக நெல்லை - திருச்செந்தூர் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக ரயில் வண்டி எண். 5004 மற்றும் 5003 ஆகிய திருச்செந்தூர் - நெல்லை மற்றும் நெல்லை - திருச்செந்தூர் இரண்டு ரயில்கள் 25 நாட்கள் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
இதேபோல், பராமரிப்பு பணிகள் காரணமாக மேட்டுப்பாளையத்தில் இருந்து போத்தனூருக்கு காலை 8.20 மணிக்கு புறப்படும் ரயில் (எண் 66611) வரும் 16ம் தேதி முழுமையாக ரத்து செய்யப்படும். அதேபோல் போத்தனூரில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு காலை 9.40 மணிக்கு புறப்படும் ரயில் (எண் 66612) வரும் 16ம் தேதி முழுமையாக ரத்து செய்யப்படும் என ரயில்வே அறிவித்துள்ளது