மே 13-ம் தேதி திருச்சி மார்க்கத்தில் சில ரயில்கள் ரத்து; தென்னக ரயில்வே அறிவிப்பு

மேம்பாலம் அகற்றுதல், பொறியியல் பணிகள் காரணமாக திருச்சி மார்க்கத்தில் ரயில் சேவைகளில் மாற்றம்; சில ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், சில ரயில்கள் தாமதமாக செல்லும் – தென்னக ரயில்வே அறிவிப்பு

மேம்பாலம் அகற்றுதல், பொறியியல் பணிகள் காரணமாக திருச்சி மார்க்கத்தில் ரயில் சேவைகளில் மாற்றம்; சில ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், சில ரயில்கள் தாமதமாக செல்லும் – தென்னக ரயில்வே அறிவிப்பு

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Train

திருச்சி ரயில்வே கோட்டத்தின் கோட்டை - முத்தரசநல்லூர் பிரிவுக்கு இடையேயான தற்போதைய சாலை மேம்பாலம் அகற்றுதல் மற்றும் பொறியியல் பணிகள் காரணமாக, வருகிற 13-ம் தேதி அந்த வழியாக செல்லும் ரயில் சேவைகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

Advertisment

அதன்படி கரூர் - திருச்சி பயணிகள் ரயில் (வண்டி எண்: 76810), திருச்சி - கரூர் பயணிகள் ரயில் (வண்டி எண்- 76809), திருச்சி - ஈரோடு பயணிகள் ரயில் (வண்டி எண்- 56105), மயிலாடுதுறை - சேலம் பயணிகள் ரயில் (வண்டி எண்- 16811), சேலம் - மயிலாடுதுறை பயணிகள் ரயில் (வண்டி எண்- 16812), ஈரோடு - திருச்சி பயணிகள் ரயில் (வண்டி எண்- 56810) உள்ளிட்ட ரயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

இதேபோல் ஈரோடு - திருச்சி பயணிகள் ரயில் (வண்டி எண்- 56106) ஈரோட்டில் இருந்து காலை 8.10 மணிக்கு புறப்படும். இந்த ரயில் கரூர் வரை மட்டுமே இயங்கும். பாலக்காடு - திருச்சி எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்- 16844) கரூர் வரை மட்டும் இயங்கும். மேலும் திருச்சியில் இருந்து மதியம் 1 மணிக்கு புறப்படும் திருச்சி - பாலக்காடு டவுன் எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்- 16843) திருச்சி - கரூர் இடையே ரத்து செய்யப்பட்டு கரூரில் இருந்து மதியம் 2.20 மணிக்கு புறப்பட்டு செல்லும்.

காரைக்கால் - எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்- 16187) காரைக்காலில் இருந்து மாலை 4.30 மணிக்கு புறப்பட்டு திருச்சி, திண்டுக்கல், கரூர் வழியாக மாற்றுப்பாதையில் எர்ணாகுளத்திற்கு செல்லும். கடலூர் - மைசூர் எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்- 16231) கடலூரில் இருந்து மாலை 3.40 மணிக்கு புறப்பட்டு திண்டுக்கல், கரூர் வழியாக மாற்றுப்பாதையில் மைசூருக்கு சென்றடையும். இந்த ரயில்கள் கோட்டை மற்றும் குளித்தலை ரயில் நிலையங்களுக்கு செல்லாது. 

Advertisment
Advertisements

மேலும், மங்களூரூ - தாம்பரம் எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்- 16160) மங்களூரூவில் இருந்து காலை 6.45 மணிக்கு புறப்பட்டு 2 மணி நேரம் தாமதமாக தாம்பரத்திற்கு சென்றடையும். மன்னார்குடி - கோவை செம்மொழி எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்- 16615) மன்னார்குடியில் இருந்து இரவு 8.25 மணிக்கு புறப்பட்டு 40 நிமிடம் தாமதமாக கோவைக்கு சென்றடையும்.

மேற்கண்டவாறு திருச்சி ரயில்வே கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

க.சண்முகவடிவேல்

Trichy Southern Railway

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: