கஜ புயல் எதிரொலி : எந்தெந்த ரயில்கள் ரத்து செய்யப்பட்டது?

கஜ புயல் காரணமாக ராமேஸ்வரம் செல்லும் மற்றும் ராமேஸ்வரத்தில் இருந்து புறப்படும் பயணிகள் ரயில்கள் இன்று மற்றும் நாளை ரத்து

கஜ புயல் காரணமாக ராமேஸ்வரம் செல்லும் மற்றும் ராமேஸ்வரத்தில் இருந்து புறப்படும் பயணிகள் ரயில்கள் இன்று மற்றும் நாளை ரத்து

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
பாம்பன் பாலம், தெற்கு ரயில்வே, கஜ புயல் எதிரொலி ரயில்கள் ரத்து

பாம்பன் பாலம்

கஜ புயல் எதிரொலி ரயில்கள் ரத்து :  இன்று மாலை பாம்பன் மற்றும் கடலூர் இடையே கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புயலில் இருந்து மக்களை பாதுகாக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Advertisment

ராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கும் ராமேஸ்வரம் தீவிற்கு செல்லும் ரயில்கள், மற்றும் தீவில் இருந்து வெளியேறும் இரயில்கள் அனைத்தும் இன்று ரத்து செய்யப்படுவதாக மதுரையில் அமைந்திருக்கும் தென்னக ரயில்வே மையம் அறிவித்திருக்கிறது.

எந்தெந்த ரயில்கள் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன அல்லது எந்த மார்க்கங்கள் வரை ரயில்கள் இயக்கப்படும் என்ற பட்டியலை நேற்று வெளியிட்டது தென்னக ரயில்வே.

மேலும் படிக்க : கஜ புயல் தொடர்பான அண்மை செய்திகள்

Advertisment
Advertisements

கஜ புயல் எதிரொலி ரயில்கள் ரத்து :

திருச்சி ராமேஸ்வரம் திருச்சி செல்லும் ( வண்டி எண் 56829/56830 ) பயணிகள் ரயில் இன்று முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

மதுரை -ராமேஸ்வரம் - மதுரை  மார்க்கத்தில் இயக்கப்படும் பயணிகள் ரயில்கள்  ( வண்டி எண் 56723/56724/56721/56722/56725/56726 ) இன்று ரத்து செய்யப்படுகிறது.

சென்னை எழும்பூரிலிருந்து ராமேஸ்வரம் வரை செல்லும் சேது எக்ஸ்பிரஸ்  ரயில் மானாமதுரை  வரை மட்டுமே இயக்கப்படும்.

கஜ புயல் எதிரொலி ரயில்கள் ரத்து : ராமேஸ்வரத்தில் இருந்து புறப்படும் ரயில்கள்

அதே போல் இன்று ராமேஸ்வரத்தில் இருந்து புறப்பட வேண்டிய ராமேஸ்வரம் - சென்னை எழும்பூர் சேது எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண் 22662 ) ராமேஸ்வரம் -மானாமதுரை ரயில் நிலையங்களுக்கு இடையே ரத்து செய்யப்பட்டுள்ளது.

ராமேஸ்வரத்தில் இருந்து திருப்பதி ராமேஸ்வரம் - திருப்பதி எக்ஸ்பிரஸ் (வண்டி எண் 16780 ) ராமேஸ்வரம் - மதுரை ரயில் நிலையங்களுக்கு இடையே ரத்து செய்யப்பட்டு மதுரையிலிருந்து இருந்து இயக்கப்படும்

ராமேஸ்வரத்தில் இருந்து கன்னியாகுமரி செல்லும் ராமேஸ்வரம் - கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் (வண்டி எண் 22621 ) ராமேஸ்வரம் -மானாமதுரை ரயில் நிலையங்களுக்கு இடையே ரத்து செய்யப்பட்டு மானாமதுரையிலிருந்து இருந்து இயக்கப்படும்

ஓகா - ராமேஸ்வரம் - எக்ஸ்பிரஸ் (வண்டி எண் 16734 ) ராமேஸ்வரம் -மதுரை ரயில் நிலையங்களுக்கு இடையே ரத்து செய்யப்பட்டு மதுரை வரை இயக்கப்படும்.

நாளை ராமேஸ்வரத்தில் இருந்து புறப்பட வேண்டிய ராமேஸ்வரம் - ஓகா எக்ஸ்பிரஸ் (வண்டி எண் 16733 )ராமேஸ்வரம் -மதுரை ரயில் நிலையங்களுக்கு இடையே ரத்து செய்யப்பட்டு மதுரையிலிருந்து இருந்து இயக்கப்படும் என தகவல் தெரிவித்திற்கு தென்னக ரயில்வே.

இதர ரயில்கள்

காரைக்கால்/வேளாங்கண்ணி - சென்னை எழும்பூர் விரைவு ரயில்கள் (வண்டி எண் 16176/16186 ) முழுமையாக ரத்து.

மன்னார்குடியில் இருந்து சென்னை வரும் மன்னை விரைவு ரயிலும் (வண்டி எண் 16180) இன்று ரத்து செய்யப்படுகிறது.

Rain In Tamilnadu Rameshwaram Express

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: