மதுரை- தூத்துக்குடி ரயில் பாதை திட்டம்: 'மாநில அரசால் எந்த பிரச்சனையும் இல்லை' - தெற்கு ரயில்வே விளக்கம்

தனுஷ்கோடி திட்டம் செயல்படுத்துவதில் சிக்கில் இருப்பதாக தமிழக அரசு கடிம் அனுப்பியிருந்தது. ஆனால், இந்த விளக்கத்தை மதுரை - தூத்துக்குடி பற்றிய கேள்விக்கு ரயில்வே அமைச்சர் பதிலாக அளித்துவிட்டதால் குழப்பம் நேரிட்டது என்று தெற்கு ரயில்வே விளக்கம் அளித்துள்ளது.

தனுஷ்கோடி திட்டம் செயல்படுத்துவதில் சிக்கில் இருப்பதாக தமிழக அரசு கடிம் அனுப்பியிருந்தது. ஆனால், இந்த விளக்கத்தை மதுரை - தூத்துக்குடி பற்றிய கேள்விக்கு ரயில்வே அமைச்சர் பதிலாக அளித்துவிட்டதால் குழப்பம் நேரிட்டது என்று தெற்கு ரயில்வே விளக்கம் அளித்துள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Southern Railway Central Govt Tamilnadu Govt Ashwini Vaishnaw Tamil News

மதுரை - தூத்துக்குடி இடையே புதிய ரயில் பாதை அமைக்கும் பணியில் எந்த சிக்கலும் இல்லை என்றும் எந்தப் பிரச்னையும் இல்லை என்றும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

ரயில் பயணிகள் மற்றும் ரயில் பாதை இல்லாத பகுதியைச் சேர்ந்த மக்களின் நீண்டகால கோரிக்கையை ஏற்று மதுரை - அருப்புக்கோட்டை- தூத்துக்குடி அகல ரயில் பாதைத் திட்டம் கடந்த 1999 -2000-ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது. 143.5 கி.மீ. தொலைவு பாதையைக் கொண்டதாக இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டது.

Advertisment

அண்டை மாவட்டங்களுக்குச் செல்லும் தொலைதூர ரயில் போக்குவரத்து வசதி இல்லாத அருப்புக்கோட்டை, விளாத்திக்குளம் பகுதி மக்களுக்கு இந்தத் திட்டம் பெரும் வரப்பிரசாதமாக இருக்கும் எனவும், தூத்துக்குடி துறைமுகத்தையும், மதுரை விமான நிலையத்தையும் இணைக்கக் கூடிய திட்டமாக இருப்பதால், இந்தத் திட்டத்தின் மூலம் மதுரை, விருதுநகா், தூத்துக்குடி மாவட்டங்களின் வணிகப் பொருளாதாரம் மேம்படும் எனவும் எதிர்பார்க்கப்பட்டது.

இந்தத் திட்டத்தின் முதல் கட்டப் பணிகளாக தூத்துக்குடி மாவட்டம், மீளவிட்டான் -மேல்மருதூா் வரையிலான 18 கி. மீ. தொலைக்கு கடந்த ஆண்டு அகல ரயில் பாதை அமைக்கப்பட்டது. இந்தப் பாதையில் கடந்த 2022-ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் சோதனை ரயில் ஓட்டமும் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இருப்பினும், மதுரை, விருதுநகா் மாவட்டங்களில் இந்தத் திட்டப் பணிகள் தொடா்பான முன்னெடுப்புகள் ஏதும் குறிப்பிடத்தக்க அளவில் இல்லை.

இந்த நிலையில், மதுரை-தூத்துக்குடி புதிய அகல ரயில் பாதைத் திட்டத்தை மத்திய அரசு கைவிட்டதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு தகவல்கள் வெளியாகின. இது மதுரை, விருதுநகா், தூத்துக்குடி மாவட்ட மக்களிடையே பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில்தான், விருதுநகா், மதுரை மாவட்டங்களில் நிலங்களைக் கையகப்படுத்த தமிழக அரசு அரசாணை வெளியிட்டிருந்தது. இதன்மூலம், இந்தப் புதிய அகல ரயில் பாதைத் திட்டம் மீண்டும் புத்துயிா் பெற்றதால் ரயில் பயன்பாட்டாளா்கள் மகிழ்ச்சியும், நம்பிக்கையும் அடைந்தனர்.

Advertisment
Advertisements

இந்த சூழலில், மதுரை - தூத்துக்குடி இடையே ரயில்வே வழித்தடங்கள் அமைக்கும் திட்டம் மாநில அரசின் கோரிக்கையால், கைவிடப்பட்டதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியிருந்ததாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், மதுரை-தூத்துக்குடி ரயில் பாதை திட்டத்தில் மாநில அரசால் எந்த பிரச்னையுமில்லை என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. 

இந்த ரயில் திட்டத்துக்கான நில ஒதுக்கீடு தொடர்பாக தமிழக அரசின் செயல்பாடு திருப்திகரமாகவே உள்ளது என்று கூறியிருக்கும் தெற்கு ரயில்வே மதுரை - தூத்துக்குடி ரயில் திட்டம் பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, சப்தம் அதிகமாக இருந்ததால், தனுஷ்கோடி ரயில் திட்டம் பற்றி கேட்கப்பட்டதாக நினைத்து அது தொடர்பான பதில் தரப்பட்டது. எனவே, அன்றைய தினம் ரயில்வே அமைச்சர் அளித்த பதில் தனுஷ்கோடி திட்டம் பற்றியது. அதில்தான், நிலம் மற்றும் சுற்றுச்சூழல் பிரச்னையால் தனுஷ்கோடி திட்டம் செயல்படுத்துவதில் சிக்கில் இருப்பதாக தமிழக அரசு கடிம் அனுப்பியிருந்தது. ஆனால், இந்த விளக்கத்தை மதுரை - தூத்துக்குடி பற்றிய கேள்விக்கு ரயில்வே அமைச்சர் பதிலாக அளித்துவிட்டதால் குழப்பம் நேரிட்டது என்று தெற்கு ரயில்வே விளக்கம் அளித்துள்ளது. 

Tamil Nadu Govt Southern Railway

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: