Advertisment

சென்னை - ராமநாதபுரம் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு; தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை - ராமநாதபுரம் பண்டிகை கால சிறப்பு ரயில் சேவை நீட்டித்த தெற்கு ரயில்வே; எத்தனை நாட்கள் நீட்டிப்பு, எவ்வளவு பெட்டிகள்? முழு விபரம் இங்கே

author-image
WebDesk
New Update
sub urban train

சென்னை - ராமநாதபுரம் பண்டிகை கால சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு என தெற்கு ரயில்வேயின் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Advertisment

பண்டிகை கால கூட்ட நெரிசலை சமாளிக்க இயக்கப்படும் தாம்பரம் - ராமநாதபுரம்  சிறப்பு ரயில்கள் சேவை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. 

அதன்படி தாம்பரம் - ராமநாதபுரம் வாரம் மும்முறை சேவை சிறப்பு ரயில் (06103) நவம்பர் 02, 04, 06, 09, 11, 13, 16, 18, 20, 23, 25, 27, 30 ஆகிய வியாழன், சனி மற்றும் திங்கட்கிழமைகளில் தாம்பரத்தில் இருந்து மாலை 05.00 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 05.55 மணிக்கு ராமநாதபுரம் வந்து சேரும். 

மறு மார்க்கத்தில் ராமநாதபுரம் - தாம்பரம் வாரம் மும்முறை சேவை சிறப்பு ரயில் (06104) நவம்பர் 03, 04, 05, 07, 10, 12, 14, 17, 19, 21, 24, 26, 28, 31 ஆகிய வெள்ளி, ஞாயிறு மற்றும் செவ்வாய் கிழமைகளில் ராமநாதபுரத்தில் இருந்து காலை 10.55 மணிக்கு புறப்பட்டு இரவு 11.10 மணிக்கு தாம்பரம் சென்று சேரும். 

இந்த ரயில்கள் செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், கடலூர் துறைமுகம், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, பேராவூரணி, அறந்தாங்கி, காரைக்குடி, கல்லல், சிவகங்கை, மானாமதுரை, பரமக்குடி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். 

இந்த ரயில்களில் ஒரு குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டி, 3 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 6 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 7 இரண்டாம் வகுப்பு முன்பதிவு இல்லாத பொதுப் பெட்டிகள், 2 இரண்டாம் வகுப்பு மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டிகள் ஆகியவை இணைக்கப்படும். இந்த ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது.

சக்தி, மதுரை

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Chennai Southern Railway Rameshwaram
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment