Diwali Special Trains : நவராத்திரி மற்றும் தீபாவளியை முன்னிட்டு இந்திய ரயில்வே தரப்பில் சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், மத்திய மற்றும் தென்னக ரயில்வே தரப்பில் விடப்பட்டுள்ள சிறப்பு ரயில்கள் குறித்து பார்க்கலாம்.
தென்னக ரயில்வே, ரயில் எண் 06049 / 06050 கொண்ட தாம்பரம் - மங்களூரு - தாம்பரம் வாராந்திர சிறப்பு ரயில் ஏற்கனவே அறிவித்துள்ளது.
இது அக்டோபர் 20 மற்றும் 27 ஆகிய தேதிகளில் இயக்கப்பட உள்ளது. தாம்பரத்தில் பிற்பகல் 1.30 மணிக்கு புறப்பட்டு மக்களூருவில் அடுத்த நாள் 7.30 மணிக்கு சென்றடையும். மறுமார்க்கத்தில் மங்களூருவில் இருந்து நண்பகல் 12 மணிக்கு புறப்பட்டு தாம்பரத்திற்கு மறுநாள் காலை 5 மணிக்கு வந்தடையும்.
மேலும், இந்த ரயில் அக்டோபர் 21, 28 ஆகிய தேதிகளில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில், சென்னை எழும்பூர், பெரம்பூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, பாலக்காடு, ஒட்டப்பாலம், சோரனூர், திரூர், கோழிக்கோடு, வடகரா, தெல்லிசேரி, கண்ணூர், பையனூர், காசர்கோடு உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும்” என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ரயிலுக்கான முன்பதிவுகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன. அதேபோல் மத்திய ரயில்வே தரப்பில், ரயில் எண் 01185 / 01186 கொண்ட லோக்மான்ய திலக் - மங்களூரு ஜங்ஷன் - லோக்மான்ய திலக் வாராந்திர சிறப்பு ரயில் விடப்பட்டுள்ளது.
இந்த ரயில் அக்டோபர் 20, 27, நவம்பர் 3, 10, 17, 24 மற்றும் டிசம்பர் 1 ஆகிய தேதிகளில் இயக்கப்பட உள்ளது. லோக்மான்ய திலக் ரயில் நிலையத்தில் இரவு 10.15 மணிக்கு புறப்பட்டு அடுத்த நாள் மாலை 5.05 மணிக்கு மங்களூரு வந்தடையும்.
மறுமார்க்கத்தில் மங்களூருவில் மாலை 6.45 மணிக்கு புறப்பட்டு அடுத்த நாள் பிற்பகல் 2.25 மணிக்கு லோக்மான்ய திலக் சென்றடையும்.
பேருந்து வசதி
இதற்கிடையில் சென்னையில் இருந்து தமிழகத்தின் திருநெல்வேலி, திருச்சி, கோயம்புத்தூர், மதுரை என பல்வேறு மாவட்டங்களுக்கும் தமிழக அரசு பேருந்து வசதி செய்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“