Diwali Special Trains | Tambaram-Nagercoil Special Train | தாம்பரம் - நாகர்கோவில் இடையே தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இயக்குகிறது.
அதன்படி, நாகர்கோவில் - தாம்பரம் அதிவிரைவு (எண் 06012) விழா சிறப்புக் கட்டண சிறப்பு ரயில் நவம்பர் 5, 12, 19 மற்றும் 26 ஆகிய தேதிகளில் ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படும்.
இந்த ரயில், மாலை 4.35 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.10 மணிக்கு தாம்பரம் சென்றடையும்.
அதேபோல், தாம்பரம் - நாகர்கோவில் அதிவிரைவு (எண் 06011) விழா சிறப்புக் கட்டண சிறப்பு ரயில் நவம்பர் 6, 13, 20 மற்றும் 27 ஆகிய தேதிகளில் திங்கள்கிழமை இயக்கப்படும்.
இந்தத் தேதிகளில் தாம்பரத்தில் இருந்து காலை 8.05 மணிக்குப் புறப்பட்டு, அதே நாளில் இரவு 8.45 மணிக்கு நாகர்கோவிலை சென்றடையும்.
வடமாநிலங்களில் தீபாவளியுடன் தந்தாரேஸ் என்ற பண்டிகையும் கொண்டாடுவார்கள். இந்த நாளில் புதிய துணி மற்றும் நகைகள் வாங்கிக் குவிப்பார்கள்.
மேலும் புதிதாக ஏதேனும் தொடங்க வேண்டும் என்றால் அதையும் செய்வார்கள். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தீபாவளி நவ.12ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
அன்றை தினம் அதிகாலையில் எழுந்து எண்ணெய் தேய்து குளித்து, வெடி வெடித்து இனிப்பு பலகாரங்கள் எடுத்துக்கொள்வார்கள். மேலும், இறைவனையும் வணங்கி பணியை தொடங்குவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“