tiruchendur | southern-railway | குமரிக்கடலில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் வரலாறு காணாத கனமழை பெய்தது.
இந்த மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது. இந்த பெருவெள்ளத்தில், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. ஆறுகளின் கரையோரம் இருக்கும் அனைத்து கிராமங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டன.
மழை வெள்ள பாதிப்பு
இந்த இரண்டு மாவட்டங்களிலும் உயிர்ச்சேதம், சொத்துகள் சேதம், பொருட்சேதம், பயிர்ச்சேதம், கால்நடைகள் உயிரிழப்பு என பாதிப்பு மிக கடுமையாக உள்ளது.
இந்த நிலையில் திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் 800 பயணிகளுடன் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்தப் பயணிகளுக்கு உணவுகள் ஹெலிகாப்டரில் வழங்கப்பட்டன.
ரயில் சேவை பாதிப்பு
மேலும் தூத்துக்குடியில் பல்வேறு இடங்களில் ரயில் தண்டவாளங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதனால், தூத்துக்குடி ரயில் நிலையத்துக்கு ரயில் சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டன.
இந்த ரயில் சேவைகள் வெள்ளிக்கிழமை முதல் தொடங்கப்பட்டன. இதையடுத்து திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் புறப்படும் இடம்
அதன்படி, “திருச்செந்தூர் அதிவிரைவு ரயில் வருகின்ற 31ம் தேதி வரை நெல்லை ரயில் நிலையத்தில் இருந்து இயக்கப்பட உள்ளது. அதேநேரம் சென்னையில் இருந்து இயக்கப்படும் திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் நெல்லை உடன் டிச.31ஆம் தேதி வரை நிறுத்தப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“