திருப்பதி- காட்பாடி மெமு ரயில் இன்று (ஜூன் 11,2024) முதல் ஜூன் 30ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது. இந்தத் தினங்களில் ரயில் சேவை முற்றிலுமாக ரத்து செய்யப்படுகிறது.
மேலும், ஜூன் 12 மற்றும் 13ஆம் தேதிகளில் சென்னை சென்டிரல்- திருவள்ளூர் புகர் ரயிலும் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
இந்த ரயில்கள் தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது. திருப்பதி காட்பாடி ரயில், திருப்பதியில் இருந்து காலை 6.50 மணிக்கு புறப்படும். அதேபோல், காட்பாடியில் இருந்த திருப்பதி செல்லும் ரயில் வண்டி எண் 07582 இரவு 9.15க்கு புறப்படும். இந்த ரயில் ஜூன் 11 முதல் ஜூன் 12 வரை ரத்து செய்யப்படுகிறது.
அதேபோல் திருவள்ளூரில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் ஜூன் 12 மற்றும் 13ஆம் தேதிகளில் திருவள்ளூரில் இருந்து சென்னை சென்டிரல் வரும் புகர் ரயிலும், சென்டிரலில் இருந்து திருவள்ளூர் செல்லும் புகர் ரயிலும் இரு நாள்களுக்கு முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
இந்தத் தகவல்கள் தென்னக ரயில்வே செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“