தெற்கு ரயில்வேயின் மதுரைக் கோட்டத்தின் வணிகக் கிளை, ரயில்களில் முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டுகளை விற்பனை செய்வதற்கும் வழங்குவதற்கும் ஏடிவிஎம் (தானியங்கி டிக்கெட் விற்பனை இயந்திரம்) உதவியாளர்களாக விண்ணப்பங்களை கோரியுள்ளது.
இந்தப் பணிக்கு படிவங்களைச் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதி ஜூன் 11, 2024 ஆகும். விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுடன் கூடிய விண்ணப்பப் படிவங்களின் விவரங்கள் https://sr.indianrailways.gov.in/ இல் கிடைக்கும்.
மதுரை சந்திப்பு, திருநெல்வேலி சந்திப்பு, திருச்செந்தூர், தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், புதுநாயக்கனூர் உள்ளிட்ட எட்டு ரயில் நிலையங்களில் ஏடிவிஎம் (தானியங்கி டிக்கெட் விற்பனை இயந்திரம்) உதவியாளர்கள் நியமிக்கப்படுவார்கள் என தெற்கு ரயில்வேயின் மதுரைக் கோட்டத்தில் இருந்து 2024 மே 27ஆம் தேதி பெறப்பட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள், ரயில்வே பயணிகளுக்கு முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டுகளை வழங்க வேண்டும். மேலும், ஏடிவிஎம் உதவியாளர்களின் பதவிக்காலம் ஓராண்டு என்றும், மொத்த டிக்கெட் விற்பனையில் மூன்று சதவீதத்தை கமிஷனாகப் பெறுவார்கள் என்றும் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயணிகளின் வசதிக்காக, பாலக்காடு கோட்டத்தின் கீழ் வரும் கடலோர கர்நாடகாவில் உள்ள மங்களூரு சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மூன்று இயந்திரங்கள் உட்பட ஆறு கோட்டங்களில் 254 கூடுதல் தானியங்கி டிக்கெட் விற்பனை இயந்திரங்களை (ஏடிவிஎம்) நிறுவ தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது. .
சென்னை கோட்டத்திற்கு 96 ஏடிவிஎம்களும், திருச்சிக்கு 12ம், மதுரை 46, திருவனந்தபுரம் 50, பாலக்காடு 38 மற்றும் சேலம் கோட்டத்திற்கு 12 கூடுதல் இயந்திரங்கள் கிடைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“