scorecardresearch

தென்மாவட்ட பயணிகளுக்கு மகிழ்ச்சி செய்தி: தாம்பரத்தில் இருந்து சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

தாம்பரம் – நாகர்கோவில் வாராந்திர அதிவிரைவு சிறப்பு ரயில் (06005) ஏப்.22 முதல் ஜூன் 24 வரை வெள்ளிக்கிழமைகளில் தாம்பரத்திலிருந்து இரவு 07.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 07.00 மணிக்கு நாகர்கோவில் சென்று சேரும்.

தென்மாவட்ட பயணிகளுக்கு மகிழ்ச்சி செய்தி: தாம்பரத்தில் இருந்து சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

கோடை விடுமுறையையொட்டி, தென் மாவட்டங்களுக்கு தாம்பரத்திலிருந்து மதுரை வழியாக நாகர்கோவில் மற்றும் திருநெல்வேலிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே மதுரைக் கோட்டம் அறிவித்துள்ளது.

கோடை விடுமுறை காலம் தொடங்க உள்ளதையொட்டி, தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்கள் இயக்குவதாக அறிவித்துள்ளது.

அதில், ‘பயணிகளின் வசதிக்காக தாம்பரம் – நாகர்கோவில் மற்றும் தென்காசி வழியாக திருநெல்வேலி – தாம்பரம் ரயில் நிலையங்களுக்கு இடையே வாராந்திர கோடை விடுமுறை சிறப்பு ரயில்களை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, தாம்பரம் – நாகர்கோவில் வாராந்திர அதிவிரைவு சிறப்பு ரயில் (06005) ஏப்.22 முதல் ஜூன் 24 வரை வெள்ளிக்கிழமைகளில் தாம்பரத்திலிருந்து இரவு 07.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 07.00 மணிக்கு நாகர்கோவில் சென்று சேரும்.

மறுமார்க்கத்தில் நாகர்கோவில் – தாம்பரம் வாராந்திர அதிவிரைவு சிறப்பு ரயில் (06006) ஏப்.24 முதல் ஜூன் 26 வரை ஞாயிற்றுக்கிழமைகளில் நாகர்கோவிலில் இருந்து மாலை 04.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 04.10 மணிக்கு தாம்பரம் சென்று சேரும்.

இந்த ரயில்கள் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

இந்த ரயில்களில் ஒரு குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டி, 2 குளிர்சாதன மூன்று அடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 13 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 4 இரண்டாம் வகுப்பு பொதுப் பெட்டிகள், 2 காப்பாளர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டிகள் இணைக்கப்படும்.

தென்காசி வழியாக திருநெல்வேலி – தாம்பரம் வாராந்திர சிறப்பு ரயில் (06004) ஏப்ரல் 17 முதல் ஜூன் 26 வரை ஞாயிற்றுக்கிழமைகளில் திருநெல்வேலியிலிருந்து இரவு 07.00 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 09.20 மணிக்கு தாம்பரம் சென்று சேரும்.

மறுமார்க்கத்தில் தாம்பரம் – திருநெல்வேலி வாராந்திர சிறப்பு ரயில் (06003) ஏப்ரல் 18 முதல் ஜூன் 20 வரை செவ்வாய்க்கிழமைகளில் தாம்பரத்திலிருந்து இரவு 10.20 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 05.35 மணிக்கு மதுரைக்கும், காலை 10.35 மணிக்கு திருநெல்வேலியும் வந்து சேரும்.

சொத்துவரி உயர்வு: தமிழகத்தில் மக்கள் விரோத ஆட்சி நடக்கிறது… ஓபிஎஸ்-இபிஎஸ் போராட்டம்

இந்த ரயில்கள் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், தென்காசி, பாவூர்சத்திரம், கீழக்கடையம், அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Southern railway has proposed to run two pairs of weekly