திருச்சி, ஸ்ரீரங்கம் ரெங்கநாதசுவாமி கோயில் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவை முன்னிட்டு, ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தில் 2 நாட்களுக்கு 4 முக்கிய ரயில்கள் நின்று செல்லும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
108 வைணவ தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என அழைக்கப்படுவதுமான ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோயிலில் வைகுந்த ஏகாதசி பெருவிழா வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
21 நாள்கள் நடைபெறும் இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழகம் மட்டுமல்லாது, பிற மாநிலங்களில் இருந்தும், பிற நாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் ஸ்ரீரங்கம் வந்து ரங்கநாத பெருமாளை தரிசித்து செல்வர்.
21 நாள்கள் நடைபெறும் இந்த விழாவில் மிக முக்கியமான சொர்க்கவாசல் திறப்பு என்னும் திருவிழாவானது 23-ஆம் தேதி சனிக்கிழமை அன்று நடைபெறவிருக்கின்றது. இதையடுத்து வைகுண்ட ஏகாதசி விழாவுக்கு வரும் பக்தர்கள் வசதிக்காக சென்னை - கன்னியாகுமரி விரைவு ரயிலும், சென்னை - கொல்லம் விரைவு ரயிலும் ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தில் நாளையும், நாளை மறுநாளும் நின்று செல்லும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
வைகுண்ட ஏகாதசி பெருவிழாவை முன்னிட்டு ஸ்ரீரங்கத்தில் ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
செய்தியாளர் க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“