/tamil-ie/media/media_files/uploads/2021/12/google-railtel-wifi-dibrugarh-3.jpg)
Southern railway installed free Wifi at 543 stations: ரயில் பயணிகளுக்கு இலவச இணைய இணைப்பை வழங்கும் நோக்கில், தென்னக ரயில்வே 543 நிலையங்களில் Wi-Fi வசதியை நிறுவியுள்ளது.
இனி ரயிலில் பயணம் செய்யும் பயணிகள், ரயில் நிலையங்களில் இலவச இணைய இணைப்பை பெறலாம். இந்த இலவச இணைய இணைப்பு பயணிகளுக்கு 30 நிமிடங்கள் வரை கிடைக்கும். இந்த வசதி ரயில் சேவை இணைப்பை நிறுத்தும் நிலையங்கள் தவிர அனைத்து முக்கிய ரயில் நிலையங்களிலும் கிடைக்கும். இந்த வசதி முன்னர் முக்கிய ரயில் நிலையங்களில் மட்டுமே கிடைத்து வந்த நிலையில் தற்போது, தென்னக ரயில்வே 543 நிலையங்களில் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
RailTel நிறுவியுள்ள இந்த வசதி, இப்போது சென்னை கோட்டத்தில் 135 நிலையங்களிலும், திருச்சி கோட்டத்தில் 105, சேலம் கோட்டத்தில் 79, மதுரை கோட்டத்தில் 95, பாலக்காடு கோட்டத்தில் 59 மற்றும் திருவனந்தபுரம் கோட்டத்தில் 70 நிலையங்களிலும் கிடைக்கிறது.
தெற்கு இரயில்வேயின் சுமார் 5,087 கி.மீ., வழித்தடத்தில் ஆப்டிகல் ஃபைபர் கேபிள் மூலம் இணைய இணைப்பு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.