New Update
00:00
/ 00:00
தாம்பரம் - ராமேஸ்வரம் தினசரி ரயில், கோவை - தாம்பரம் இடையே வாராந்திர ரயில் உட்பட 10 புதிய ரயில்களை இயக்க, ரயில்வே வாரியத்திற்கு தெற்கு ரயில்வே பரிந்துரை செய்துள்ளது.
தெற்கு ரயில்வேயில் பல ஆண்டுகளாக நடந்து வந்த இரட்டை ரயில் பாதை மற்றும் அகலப்பாதை திட்டங்கள் முடிவடைந்துள்ளன. இதனால், தெற்கு ரயில்வே அதிகாரிகள் குழுவினர் ரயில் பயணிகளின் தேவை குறித்து பல மாதங்களாக ஆய்வு செய்து அறிக்கையை தயாரித்துள்ளனர்.
அதன்படி, தாம்பரம் - ராமேஸ்வரம், கோவை - தாம்பரம் உட்பட பல்வேறு வழித்தடங்களில், 10 புதிய ரயில்களை இயக்க ரயில்வே வாரியத்திற்கு, தெற்கு ரயில்வே பரிந்துரை செய்துள்ளது.
தெற்கு ரயில்வே பரிந்துரையில், தாம்பரத்தில் இருந்து பட்டுக்கோட்டை வழியாக ராமேஸ்வரத்திற்கு தினமும் ரயில் சேவை, கோவையில் இருந்து பொள்ளாச்சி, திண்டுக்கல், திருச்சி வழியாக தாம்பரத்திற்கு வாராந்திர ரயில் என 10 புதிய ரயில்களுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
புதிய ரயில்கள் இயக்கக் கோரிய பரிந்துரையில் இடம்பெற்றுள்ள ரயில்கள் விவரம்:
தெற்கு ரயில்வே பரிந்துரையில், தாம்பரத்தில் இருந்து பட்டுக்கோட்டை வழியாக ராமேஸ்வரத்திற்கு தினமும் ரயில் சேவை,
கோவையில் இருந்து பொள்ளாச்சி, திண்டுக்கல், திருச்சி வழியாக தாம்பரத்திற்கு வாராந்திர ரயில் சேவை
தாம்பரம் - பீஹார் மாநிலம் தனபூர் இடையே தினசரி விரைவு ரயில் சேவை
தாம்பரம் - மேற்கு வங்க மாநிலம் சந்திரகாச்சி இடையே வாராந்திர விரைவு ரயில் சேவை
திருநெல்வேலி - ஜோத்பூர் வாராந்திர விரைவு ரயில் சேவை
கொச்சுவேலி -- கவுஹாத்தி வாராந்திர விரைவு ரயில் சேவை
கொச்சுவேலி - பெங்களூரு வாரம் 3 முறை ரயில் சேவை உட்பட 10 ரயில்களை இயக்க பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே கூறுகையில், ரயில் திட்டப் பணிகள் முடிந்துள்ள வழித்தடங்கள் மற்றும் பயணிகளின் தேவை உள்ள வழித்தடங்களில் ஆய்வு செய்து, கூடுதல் ரயில்கள் இயக்க பரிந்துரைப்பது வழக்கமான நடவடிக்கை. இந்த அறிக்கையை ரயில்வே வாரியம் ஆய்வு செய்து, அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும். பரிந்துரை என்பது ரயில்கள் இயக்குவது குறித்து ஆரம்ப கட்ட பணி தான்; இறுதி முடிவை ரயில்வே வாரியமே அறிவிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.