இந்தாண்டின் கோடை காலத்தில் பயணிகளின் கூட்ட நெரிசலைக் குறைக்க தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை இயக்கவுள்ளது.
வண்டி என்: 06021: தாம்பரம்- திருநெல்வேலி சிறப்புக் கட்டண சிறப்புக் கட்டண ரயில், வருகின்ற ஏப்ரல் 27, மே 4, 11, 18, 25 (வியாழன்) ஆகிய தேதிகளில் தாம்பரத்தில் இருந்து இரவு 9 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் காலை 9 மணிக்கு திருநெல்வேலி சந்திப்பைச் சென்றடையும்.
வண்டி எண்: 06012: நாகர்கோவில்-தாம்பரம் சூப்பர்பாஸ்ட் சிறப்புக் கட்டண ரயில், நாகர்கோவிலில் இருந்து ஏப்ரல் 23, 30, மே 7, 14, 21, 28, ஜூன் 4, 11, 18, 25 மற்றும் ஜூலை 2 (ஞாயிற்றுக்கிழமைகளில்) மாலை 4.35 மணிக்குப் புறப்பட்டு தாம்பரம் சென்றடைந்து, மறுநாள் காலை 4.10 மணி க்கு புறப்படும்.
வண்டி எண்: 06011: தாம்பரம் – நாகர்கோவில் சூப்பர் பாஸ்ட் சிறப்புக் கட்டண கோடை சிறப்புக் கட்டண ரயில் சேவை, ஏப்ரல் 24, மே 1, 8, 15, 22, 29, ஜூன் 5, 12, 19, 26 மற்றும் ஜூலை 3 (திங்கட்கிழமை) ஆகிய தேதிகளில் தாம்பரத்தில் இருந்து காலை 8.15 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் இரவு 8.55 மணியளவில் நாகர்கோவில் சென்றடையும்.
வண்டி என்: 06022: திருநெல்வேலி- சென்னை எழும்பூர் சிறப்புக் கட்டண ரயில் திருநெல்வேலியில் இருந்து ஏப்ரல் 28, மே 5, 12, 19, 26 (வெள்ளிக்கிழமைகளில்) மதியம் 1 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் அதிகாலை 3.20 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும்.
வண்டி எண்: 06044: திருவனந்தபுரம்- சென்னை எழும்பூர் சிறப்புக் கட்டண ரயில் திருவனந்தபுரத்தில் இருந்து மே 3, 10, 17, 24, 31, ஜூன் 7, 14, 21, 28 (புதன்கிழமைகளில்) இரவு 7.40 மணிக்குப் புறப்பட்டு, 12.45 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும்.
வண்டி எண்: 06043: சென்னை எழும்பூர்- திருவனந்தபுரம் சூப்பர்பாஸ்ட் சிறப்புக் கட்டண கோடை சிறப்பு ரயில், மே 4, 11, 18, 25, ஜூன் 1, 8, 15, 22 மற்றும் 29 (வியாழன்) ஆகிய தேதிகளில் சென்னை எழும்பூரில் இருந்து பிற்பகல் 2.25 மணிக்குப் புறப்பட்டு, அடுத்த நாள் காலை 6.45 மணிக்கு திருவனந்தபுரத்தைச் சென்றடையும்.
வண்டி எண்: 06031: தாம்பரம்- திருநெல்வேலி சிறப்புக் கட்டண ரயில், தாம்பரத்தில் இருந்து ஏப்ரல் 26, மே 3, 10, 17, 24 (புதன்கிழமை) இரவு 10.30 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 11.15 மணிக்கு திருநெல்வேலியை சென்றடையும்.
வண்டி எண்: 06032: திருநெல்வேலி-தாம்பரம் சிறப்புக் கட்டண ரயில், திருநெல்வேலியில் இருந்து ஏப்ரல் 27, மே 4, 11, 18 மற்றும் 25 (வியாழன்) ஆகிய தேதிகளில் மதியம் 1.15 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் அதிகாலை 2.50 மணிக்கு தாம்பரம் சென்றடையும்.
வண்டி எண்: 06039: தாம்பரம்- நாகர்கோவில் சூப்பர் பாஸ்ட் சிறப்புக் கட்டண ரயில் ஏப்ரல் 21, 28, மே 5, 12, 19 மற்றும் 26 ஆகிய தேதிகளில் (வெள்ளிக்கிழமைகளில்) தாம்பரத்தில் இருந்து இரவு 7.30 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 7.10 மணிக்கு நாகர்கோவிலை சென்றடையும்.
எண்.06040 நாகர்கோவில்- தாம்பரம் சூப்பர்பாஸ்ட் சிறப்புக் கட்டண ரயில், நாகர்கோவிலில் இருந்து ஏப்ரல் 22, 29, மே 6, 13, 20 மற்றும் 27 ஆகிய தேதிகளில் (சனிக்கிழமைகளில்) மாலை 4.15 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.10 மணிக்கு தாம்பரம் சென்றடையும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil