Southern Railways News: சென்னை தாம்பரத்தில் இருந்து நாகர்கோவில் வரை இயக்கப்படும் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
பராமரிப்பு பணியின் காரணத்தால் ஒருசில எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகளின் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளனர்.

சென்னை தாம்பரத்தில் இருந்து நாகர்கோவில் வரை (வண்டி எண்: 20691) செயல்படும் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயில் சேவை இரவு 11 மணிக்கு புறப்பட்டு நாளை (அக்டோபர் 17ஆம் தேதி) திண்டுக்கல் மற்றும் நாகர்கோவிலுக்கு சென்றடைகிறது.
மேலும், நாகர்கோவிலில் இருந்து தாம்பரம் வரை செயல்படும் ஆதியோதயா எக்ஸ்பிரஸ் ரயில் சேவை மதியம் 3.50 மணிக்கு புறப்பட்டு (அக்டோபர் 18ஆம் தேதி) வந்தடையும் என்று கூறப்படுகிறது.
செங்கோட்டையில் இருந்து மதுரை வரை செயல்படும் எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்: 06662) காலை 7 மணிக்கு புறப்பட்டு அக்டோபர் 18ஆம் தேதி விருதுநகர் வந்தடைய உள்ளது.
மதுரையில் இருந்து செங்கோட்டை வரை செயல்படும் எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்: 06665) மாலை 5.15 மணிக்கு புறப்பட்டு அக்டோபர் 18ஆம் தேதி விருதுநகர் அருகில் ரத்து செய்யப்படுகிறது, மேலும் விருதுநகரில் இருந்து மாலை 6.10 மணியளவில் செயல்படும் என்று கூறப்படுகிறது.
இதை தொடர்ந்து, நாகர்கோவிலில் இருந்து கோயம்பத்தூர் வரை செயல்படும் எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்: 16321) வருகின்ற செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 18ஆம் தேதி) திண்டுக்கல் இடையே ரத்து செய்யப்பட்டு மதியம் 1.25 மணிக்கு புறப்பட்டு செல்லும் என்று கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து, கோயம்பத்தூரில் இருந்து புறப்படும் இந்த எக்ஸ்பிரஸ் காலை 8 மணிக்கு புறப்பட்டு திண்டுக்கல் மற்றும் நாகர்கோவில் இடையே ரத்து செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil