மிக்ஜாம் புயம் மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் சாலை, வீடுகளில் மழை நீர் தேங்கியது. மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது. ரயில் செல்லும் வழிகளிலும் மழை நீர் தேங்கியுள்ளதால் இன்று (டிச.7) 15 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னை சென்ட்ரல், எழும்பூரில் இருந்து செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. பயணிகள் அதற்கு ஏற்றவாறு தங்கள் பயணங்களை திட்டமிட்டுக் கொள்ள ரயில்வே அறிவுறுத்தியுள்ளது.
டாக்டர் எம்.ஜி.ஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி ஆதமன் எக்ஸ்பிரஸ் ரயில், டாக்டர் எம்ஜிஆர் சென்ட்ரல் - விஜயவாடா வந்தே பாரத் எக்ஸ்பிரஸ், டாக்டர் எம்ஜிஆர் சென்ட்ரல் - மைசூரு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ், டாக்டர் எம்ஜிஆர் சென்ட்ரல் - மைசூரு சதாப்தி எக்ஸ்பிரஸ், டாக்டர் எம்ஜிஆர் சென்ட்ரல் - கோவை கோவை எக்ஸ்பிரஸ், டாக்டர் எம்ஜிஆர் சென்ட்ரல்- கேஎஸ்ஆர் பெங்களூரு பிருந்தாவன் எக்ஸ்பிரஸ், டாக்டர் எம்ஜிஆர் சென்ட்ரல் - திருப்பதி எக்ஸ்பிரஸ், திருப்பதி - டாக்டர் எம்ஜிஆர் சென்ட்ரல் எக்ஸ்பிரஸ், டாக்டர் எம்ஜிஆர் சென்ட்ரல் - கோவை சதாப்தி எக்ஸ்பிரஸ், டாக்டர் எம்ஜிஆர் சென்ட்ரல் - விஜயவாடா ஜன. சதாப்தி எக்ஸ்பிரஸ், டாக்டர் எம்ஜிஆர் சென்ட்ரல் - கேஎஸ்ஆர் பெங்களூரு டபுள் டெக்கர் எக்ஸ்பிரஸ், சென்னை எழும்பூர் - திருநெல்வேலி வந்தே பாரத் ஸ்பெஷல் மற்றும் திருநெல்வேலி - சென்னை எழும்பூர் வந்தே பாரத் ஸ்பெஷல் ஆகிய ரயில்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன.
அதே நேரம் புறநகர் ரயில் சேவை இன்று முதல் வழக்கம் போல் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை சென்ட்ரல்-அரக்கோணம், சென்னை கடற்கரை-செங்கல்பட்டு, சிந்தாதிரிப்பேட்டை-வேளச்சேரி இடையே புறநகர் ரயில்கள் வழக்கம் போல் இயக்கப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“