தமிழ்நாட்டிலிருந்து பீகாருக்கு நேரடி ரயில்: தெற்கு ரயில்வேயின் முதல் அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் சேவை

தெற்கு ரயில்வே தனது முதல் அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை ஈரோடுக்கும், பீகாரின் ஜோக்பானிக்கும் இடையே இயக்க உள்ளது. ஏசி வசதி இல்லாத இந்த ரயில் வாராந்திர சேவையாக, 3,300 கி.மீ. தூரம் பயணிக்கும்.

தெற்கு ரயில்வே தனது முதல் அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை ஈரோடுக்கும், பீகாரின் ஜோக்பானிக்கும் இடையே இயக்க உள்ளது. ஏசி வசதி இல்லாத இந்த ரயில் வாராந்திர சேவையாக, 3,300 கி.மீ. தூரம் பயணிக்கும்.

author-image
WebDesk
New Update
Southern Railway Amrit Bharat

தமிழ்நாட்டிலிருந்து பீகாருக்கு நேரடி ரயில்: தெற்கு ரயில்வேயின் முதல் அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் சேவை

பல மாத தாமங்களுக்குப் பிறகு, தெற்கு ரயில்வே தனது முதல் அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை இயக்கத் தயாராக உள்ளது. இது ஏசி வசதி இல்லாத நீண்ட தூர ரயிலாகும். வாராந்திர சேவையாக, 16601/16602 என்ற எண் கொண்ட இந்த ரயில், தமிழ்நாட்டின் ஈரோடு மற்றும் பீகாரின் ஜோக்பானி இடையே இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் 8 மண்டலங்கள் வழியாக 3 ஆயிரத்து 300 கி.மீ. தூரத்திற்கும் மேல் பயணிக்கும்.

Advertisment

ரயில்வே வாரியம் செப்.4 அன்று வெளியிட்ட உத்தரவின்படி, இந்த ரயில் ஈரோட்டில் இருந்து ஒவ்வொரு வியாழக்கிழமையும் காலை 7 மணிக்கு புறப்படும். மறுமார்க்கமாக ஜோக்பானியிலிருந்து ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் காலை 7:30-க்கு புறப்படும். இந்த ரயில் சேலம், காட்பாடி, பெரம்பூர், விஜயவாடா, நாக்பூர், ஜபல்பூர், பாட்னா, கதிஹார் வழியாக பயணிக்கும். இடாசி மற்றும் பரௌனி போன்ற முக்கிய மையங்கள் உட்பட 50-க்கும் மேற்பட்ட நிறுத்தங்களில் நின்று செல்லும்.

இந்த ரயிலின் பெட்டிகள் ஈரோடு, கதிஹார் ஆகிய இடங்களில் பராமரிக்கப்படும். ரயிலில் மொத்தம் 22 பெட்டிகள் இருக்கும். இதில் 8 இரண்டாம் வகுப்பு இருக்கை வசதியுடன் கூடிய பெட்டிகள், 11 இரண்டாம் வகுப்பு இருக்கை பெட்டிகள், 2 பிரேக்-கம்-சரக்கு பெட்டிகள் மற்றும் ஊழியர்கள் மற்றும் உபகரணங்களுக்கான ஒரு பெட்டி ஆகியவை அடங்கும்.

சென்னை ஐ.சி.எஃப்-ஆல் கட்டப்பட்ட இந்த ரயில் பெட்டிகள் பிப்.2025 முதல் திருவொற்றியூர் மற்றும் நாயுடுபேட்டா ஆகிய ரயில் நிலையங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இது பல மாதங்களாகப் பயன்படுத்தப்படாமல் இருந்தது. தற்போது, இதன் வழித்தடம் இறுதியாக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் சேவை தொடக்கத்தில் சிறப்பு ரயிலாக இயக்கப்பட்டு, பின்னர் வாராந்திர வழக்கமான சேவையாக மாறும் என்று தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். புதிய ரயில் சேவை குறித்த திட்டமிடல் மற்றும் விளம்பரங்களை உடனடியாகத் தொடங்குமாறு ரயில்வே வாரியம் மண்டல ரயில்வேக்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

Southern Railway Chennai

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: