Southern Railway News: தமிழ்நாட்டிலிருந்து இந்தியாவின் பல்வேறு இடங்களுக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் வழித்தளங்களை தெற்கு ரயில்வே மேம்படுத்த முயன்று வருகிறது.
அதன் விளைவாக, தற்போது 7 எக்ஸ்பிரஸ் ரயில்களின் வேகத்தை அதிகரித்துள்ளனர். இதனால், மக்களின் பயண நேரம் குறைய வாய்ப்புள்ளது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சுமார் 130 கிலோமீட்டர் வரை ரயில்களின் வேகம் அதிகரித்துள்ளது. மேலும், ரயில் தண்டவாளத்தின் உறுதித்தன்மையும் அதிகரிக்கப்பட்டுள்ளதால், 7 ரயில்களின் வேகம் அதிகரித்துள்ளது.
பயணிகளின் பயண நேரம் குறைய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் விளைவாக, சென்னை சென்ட்ரலில் இருந்து புது டெல்லிக்கு செல்லும் ஜி.டி (கிராண்ட் டிரங்க்) எக்ஸ்பிரஸ் 6.30 மணியளவில் புது டெல்லியை சென்றடையும் நிலையில், தற்போது இதன் வேகம் அதிகரிக்கப்பட்டு 90 நிமிடங்களுக்கு முன்பாக காலை 5.05 மணியளவில் டெல்லியை சென்றடைய உள்ளது.
இதேபோல், சென்னையிலிருந்து டெல்லி சென்றடையும் மற்றொரு ரயிலான தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் வழக்கத்தை காட்டிலும் 70 நிமிடங்கள் முன்பாக டெல்லி சென்றடையும் படி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், குருவாயூர், புனலூர் எக்ஸ்பிரஸ் 50 நிமிடங்களுக்கு முன்பாகவும், மும்பை திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் 60 நிமிடங்களுக்கு முன்பாகவும், ராஜ்கோட் கோவை எக்ஸ்பிரஸ் 70 நிமிடங்களுக்கு முன்பாகவும், கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் 40 நிமிடங்களும் பயண நேரம் குறைக்கப்பட்டு வழக்கத்தை விட முன்னதாக ரயில்கள் சம்மந்தப்பட்ட இடத்திற்கு செல்லும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil