Southwest Monsoon Tamil Nadu Weather News : இன்று காலை முதலே கன்னியாகுமரி பகுதியில் அமைந்திருக்கும் மார்த்தாண்டம், குழித்துறை, களியக்காவிளை, முஞ்சிறை, புதுக்கடை மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதியில் காலை முதலே நல்ல மழை பெய்து வருகின்றது.
அக்னி நட்சத்திரம் முடிந்த பின்பும் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கோடை வெயில் வாட்டி வருகிறது. புதுவையில் உள்ள பள்ளிகளுக்கு கோடை விடுமுறை மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க : தமிழகத்தின் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள
கன மழைக்கான வாய்ப்பு
இன்று தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழைக்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. குறிப்பாக கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், வேலூர், திருவண்ணாமலை மற்றும் ஈரோடு மாவட்டங்களுக்கு கனத்த மழை பெய்யும் என்று அறிவித்துள்ளது வானிலை ஆய்வு மையம்.
இடியுடன் கூடிய கனமழை
40 முதல் 50 கிமீ வேகத்தில் கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை, நீலகிரி, ஈரோடு, கோவை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று கூறியுள்ளது சென்னை வானிலை ஆராய்ச்சி மையம்.
சென்னை வானிலை
சென்னையைப் பொறுத்தவரையில் இன்று மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும் வெப்பநிலையில் எந்த மாற்றமும் இருக்காது. குறைந்தபட்சம் 30 டிகிரி மற்றும் அதிக பட்சம் 40 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகக்கூடும்.
கடற்சீற்றம்
நாகை மாவட்டம் வேதாரண்யம் மற்றும் அதனை ஒட்டியுள்ள கடலோரப்பகுதியில் மூன்றாவது நாளாக கடல் சீற்றம். ஆறுகாட்டுத்துறை, கோடியக்கரை, திருத்தலைக்காடு , புஷ்பவனம், வெள்ளப்பள்ளம் உள்ளிட்ட மீனவகிராம மக்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லவில்லை
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் இன்று பிற்பகலில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. வேலூர் மாவட்டம் காட்பாடி, திருவலம், சேவூர் , மேல் பாடி, கார்ணாம்பட்டு ஆகிய பகுதிகளில் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது.
இதற்கிடையே மேற்கு இந்திய பெருங்கடலில் சாதகமான சூழல் இல்லாததால் தென்மேற்கு பருவமழை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜூன் 10-ம் தேதிக்கு பிறகு தான் பருவமழை தொடங்குவதற்கான சூழல் நிலவுவதாக வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.