இன்றைய வானிலை : கரூர், சேலம் பகுதிகளில் வெளுத்து வாங்கிய கனமழை

தேனியில் நேற்று மாலையில் இருந்து இடைவிடாமல் 4 மணி நேரத்திற்கும் மேலாக சாரல் மழை பெய்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சி. 

Chennai weather update south Tamil Nadu gets heavy rainfall alert
Chennai weather update south Tamil Nadu gets heavy rainfall alert

Southwest Monsoon Weather Update : இடியுடன் கூடிய கனமழை இன்று தமிழகத்தில் பரவலாக பல்வேறு இடங்களில் பெய்வதற்கான வாய்ப்புகள் உருவாகியுள்ளன. குறிப்பாக தேனி, திருநெல்வேலி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், நாமக்கல், தர்மபுரி, கோவை, வேலூர், ஈரோடு மாவட்டங்களில் இன்று மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

காற்றின் வேகம்

மணிக்கு 40 முதல் 50 கி.மீ வரையில் காற்று வீசக்கூடும்

வெப்பநிலை

கரூர், திருச்சி, அரியலூர், காஞ்சி, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் வழக்கத்தைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகக் கூடும்.

சென்னை வானிலை

சென்னையப் பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். வெப்பநிலை அதிகபட்சமாக 38 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்சமாக 29 டிகிரி செல்சியஸ் பதிவாகக்கூடும்.

தென்மேற்கு பருவமழை

சராசரியாக ஒவ்வொரு ஆண்டும் கேரளத்தில் ஜூன் 1ம் தேதி அல்லது அதற்கும் முன்பாகவே பருவமழை ஆரம்பித்துவிடும். இந்நிலையில் இந்த வருடம் 5 நாட்கள் மழை மிகவும் தாமதமாக பெய்யத் துவங்கியுள்ளது. இருப்பினும் மக்கள் இந்த  மழைக்காக வெகுநாட்கள் காத்திருந்தனர். எர்ணாகுளத்தில் நேற்று இரவு 8 மணியில் இருந்து மழை பெய்து கொண்டிருக்கிறது.

தேனியில் நேற்று மாலையில் இருந்து இடைவிடாமல் 4 மணி நேரத்திற்கும் மேலாக சாரல் மழை பெய்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சி.

மேலும் படிக்க : சென்னையை மட்டும் ஏமாற்றும் மழை! பின்னால் இருக்கும் பகீர் காரணத்தை போட்டுடைத்த சென்னை வெதர்மேன்.

கரூர் மாவட்டத்தில் உள்ள குளித்தலை உள்ளிட்ட பல பகுதிகளில் பரவலாக மழை பெய்து சாலைகளில் நீர் பெருக்கெடுத்து ஓடியது. கோடை காலத்தின் வெப்பம் கொஞ்சம் கொஞ்சமாக தணிந்து வருகின்றது.

சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள பிரபல மலைவாசஸ்தலமான ஏற்காட்டில் நேற்று பெய்த கனமழையால் சாலைகள் பெயர்ந்து அடித்துச் செல்லப்பட்டது. சாலைகளை சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Southwest monsoon weather update chennai weather kerala tamil nadu karnataka rainfall forecast

Next Story
நீட் தேர்வில் தோல்வி: தமிழகத்தில் இரு மாணவிகள் தற்கொலை!Neet exam result 3 girls committed suicide, Tamil News Live Updates, Tamil Nadu News, Tamil News, India News, News in Tamil,
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com