chennai weather today: சென்னை மக்கள் மழையை பார்த்தே ஆண்டுகள் ஆகிவிட்டன. கோடை மழை, புயல் மழை என தமிழகத்தின் பல மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்து பொதுமக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினாலும் சென்னை மட்டும் தனித்து நின்றது.
தமிழகத்தின் தலைநகரமான சென்னை தண்ணீர் இன்றி தவித்து வருகிறது. குடிநீர் பஞ்சம் தலைவிரித்து ஆடிக் கொண்டிருக்கிறது. பணம் கொடுத்தாலும் தண்ணீர் கிடைப்பதில்லை. மக்கள் காலி குடங்களை வைத்துக் கொண்டு தெரு தெருவாக அலைந்துக் கொண்டிருக்கிறார்கள். நிலத்தடி நீர் சுத்தமாக வற்றியதால் பம்புகளிலும் தண்ணீர் வருவதில்லை.
மேலும் படிக்க - அரேபிய கடலில் உருவாகும் புயலால் தமிழகத்துக்கு பாதிப்பா? - தமிழ்நாடு வெதர்மேன் அப்டேட்
இவை எல்லாவற்றிற்கும் தீர்வு மழை மட்டுமே. ஆனால் சென்னையில் அதற்கு வாய்ப்பே இல்லை என்பது போல் வெயில் வாட்டி வதைக் கொண்டிருக்கிறது. மக்கள் வீடுகளை விட்டு வெளியில் வர பயந்துக் கொண்டிருக்கிறார்கள். சென்னையின் இந்த நிலைக்கு காரணமாக கடந்த சில நாட்களாக சில வதந்திகள் மக்களிடம் அதிகம் பரவி வருகிறது.
சென்னை நகரம் அளவுக்கு அதிகமாக பாவம் செய்து விட்டதாகவும், மரங்கள் சுத்தமாக வெட்டப்பட்டதாலும், கொலை, கொள்ளை போன்ற குற்றச்செயல்கள் அதிகரித்ததாலும் சென்னையில் மழை வராமல் வஞ்சிக்கப்படுவதாக அதிகம் பேசப்பட்டு வருகிறது.
இவை எல்லாவற்றிருக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தமிழ்நாடு வெதர்மேன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் முக்கியமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். உண்மையில் சென்னையில் மழை வராமல் போவதற்கு என்ன காரணம்? என்ற விளக்கத்தை சென்னை வெதர்மேன் வழங்கியுள்ளார்.
மேலும் படிக்க : சேலம் மற்றும் கரூர் பகுதியில் வெளுத்து வாங்கிய கனமழை
இதோ அந்த பதிவு... “ கடந்த 180 நாட்களாக சென்னையில் மழை இல்லையே ஏன்? சென்னை சபிக்கப்பட்டு விட்டதா? மரங்கள் இல்லாததாலா? அல்லது மக்களாலா? சென்னையை தவிர மற்ற எல்லா மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. ஆனால் சென்னை இவை எல்லாவற்றையும் வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கிறது.
உண்மையில் கோடை காலம் இவ்வளவு கடுமையாக இருந்ததா? சென்னையின் தட்பவெப்பநிலை பற்றி முதலில் தெரிந்துக் கொள்வோம். சென்னையில் தொடர்ந்து 180 நாட்கள் மழை இல்லாத்தை குறித்து நகர வாசிகள் பல்வேறு கருத்துக்களை கூறிவருகின்றனர். ஆனால் உண்மையில் கடந்த வருடமும் தொடர்ந்து 187 நாட்கள் சென்னையில் மழை இல்லை. கடந்த 20 ஆண்டுகள் புள்ளி விவரத்தை பார்க்கும் போதும் புயல் மற்றும் காற்றழுத்த தாழ்வு காரணங்களால் மட்டுமே நம்மால் மழையை பார்க்க முடிந்துள்ளது.
சென்னையில் மழை பெய்ய வேண்டும் என்றால் வேலூர் மற்றும் நகரி மலைகளில் மேகங்கள் உருவாகி அது சென்னை பக்கம் நகர்ந்து வர வேண்டும். ஆனால் இம்முறை உருவான மேகங்கள் சேலம்,கிருஷ்ணகிரி பக்கம் நகர்ந்து சென்றுள்ளது. இம்முறை மட்டுமே சென்னை மக்கள் மழை பெற முடியும்.
கூடிய விரைவில் தென்மேற்கு பருவ மழை பெய்ய உள்ளது. சென்னையில் வெப்ப சலனம் காரணமாக முதல் மழை விரைவில் பெய்யும். ஆனால் அதனால் நீரின் தேவை தீர்ந்து விடாது என்பது உறுதி. இப்போது உங்களுக்கு சென்னையில் ஏன் மழை பெய்யவில்லை? என்ற கேள்விக்கு விடை கிடைத்து இருக்கும்.” என்று கூறியுள்ளார்.
மேலும் படிக்க : தென் தமிழகத்தில் லேசனாது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்