தருமபுரி மக்களவைத் தொகுதியில் பா.ஜ.க கூட்டணியில் போட்டியிடும் பா.ம.க வேட்பாளர் சௌமியா அன்புமணிக்கு ஆதரவாக அவரது மகள் இன்று வீடு வீடாக சென்று துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
தமிழ்நாட்டில் மக்களைத் தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி அரசியல் கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், தருமபுரி மக்களவைத் தொகுதியில் பா.ஜ.க தலைமையிலான கூட்டணியில் பா.ம.க சார்பில் அக்கட்சியின் தலைவர் அன்புமணியின் மனைவி சௌமியா அன்புமணி போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக அவரது 2 மகள்களும் தொகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இன்று குமாரசாமி பேட்டை பகுதியில் அவரது மகள் சஞ்சுத்ரா வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். சௌமியா அன்புமணிக்கு வாக்களிக்க வேண்டும் என்றும் மாம்பழம் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்று கோரியும் வாக்கு சேகரித்தார். கழுத்தில் பா.ம.க துண்டு கொண்டு அவர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அதோடு துண்டு பிரசுரங்களையும் வழங்கி வாக்கு சேகரித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“