ராமேஸ்வரம் அருகே உள்ள புதுரோடு பகுதியில் பிரசித்தி பெற்ற நம்பு நாயகி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு நாள்தோறும் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், அன்புமணி ராமதாஸின் மனைவியான சௌமியா அன்புமணி, தனது இரு மகள்களுடன் நம்புநாயகி அம்மன் ஆலயத்திற்கு வருகை தந்தார். அங்கு அவர், மஞ்சள் அரைத்து அம்மனுக்கு படையல் செய்து, தனது கட்சியின் சின்னமான மாம்பழத்தை அம்மன் சன்னதியில் வைத்து சிறப்பு பூஜை செய்து வழிபாடு நடத்தினார்.
இந்த தரிசனத்தில் பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் பலரும் சௌமியா அன்புமணி உடன் வந்திருந்து சாமி தரிசனம் செய்தனர். தரிசனத்திற்குப் பிறகு, கட்சி நிர்வாகிகள் சௌமியா அன்புமணி உடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.