/tamil-ie/media/media_files/uploads/2020/02/New-Project-2020-02-12T185031.590.jpg)
singer SP Balasubramaniam , singer SP Balasubramaniam dedicated nellore ancestral home, Sri Kanchi Kamakoti Peetham, vijayendrar, எஸ்பி பாலசுப்ரமணியம், பூர்வீக வீட்டை தானமளித்த எஸ்பி பாலசுப்ரமணியம், நெல்லூர், விஜயேந்திரர், காஞ்சி காமகோடி பீடம், vijayendra saraswathi, SP Balasubramaniam nellore home
பிரபல பாடகர் பத்மபூஷன் எஸ்.பி.பாலசுப்ரமணியம் நெல்லூரில் உள்ள தனது பூர்வீக வீட்டை வேத பாடசாலை அமைப்பதற்காக விஜயேந்திரரை சந்தித்து காஞ்சி காமகோடி பீடம் என்று அழைக்கப்படும் சங்கர மடத்துக்கு தானமாக அளித்துள்ளார்.
திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் தமிழ், தெலுங்கு, மலையாளம் கன்னடம், இந்தி என பல மொழி சினிமாக்களில் 40,000 பாடல்களுக்கு மேல் பாடி கின்னஸ் சாதனை படைத்துள்ளார். இவருடைய இசை சேவையை கௌரவிக்கும் வகையில் மத்திய அரசு இவருக்கு பத்மபூஷன் விருந்து வழங்கி கௌரவித்துள்ளது.
எஸ்.பி.பாலசுப்ரமணியம் ஆந்திரப்பிரதேசத்தில் உள்ள நெல்லூர் மாவட்டத்தில் பிறந்தவர். தெலுங்கு தாய்மொழியாகக் கொண்டவர் என்றாலும் இவர் ஒரு தமிழ் சினிமா பாடகராகவே அறியப்படுகிறார். திரைப்பட பின்னணி பாடகராக வளர்ந்த பின் அவர் சென்னைக்கு குடியேறிவிட்டாலும் அவருடைய பூர்வீக வீடு நெல்லூரில் அப்படியே இருந்து வந்தது.
Padmabhushan Sri SP Balasubramaniam garu dedicated his ancestral home in Nellore to Sri Kanchi Kamakoti Peetham for establishing Veda Patashala ????????????
TFS @GabbarSanghi@sgurumurthypic.twitter.com/lDymlvzs3R— #IndiaSupportsCAA ಸುಮಂತ । सुमन्त । సుమంత (@sumanthbharatha) February 12, 2020
இந்த நிலையில், பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் நெல்லூரில் உள்ள தனது பூர்வீக வீட்டை வேத பாடசாலை அமைப்பதற்காக காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திரரை நேரில் சந்தித்து காஞ்சி காமகோடி பீடம் சங்கர மடத்துக்கு தானமாக அளித்துள்ளார்.
அதற்காக, எஸ்.பி.பாலசுப்ரமணியம் சங்கராச்சாரியார் விஜயேந்திரரை நேரில் சந்தித்து பக்தி பாடல் பாடி அவரை வணங்கியுள்ளார். அப்போது, எடுக்கப்பட்ட வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.