இளைஞரை பூட்ஸ் காலால் உதைப்பது போன்ற வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், வெளிமாநிலத்திலிருந்து வந்த ஒருவர், பெண் போலீஸிடம் தவறாக நடந்து கொண்டார். கைது செய்தபோது சிலர் போலீஸைத் தாக்க வந்தனர். கைதான அவர்களை அங்கே அமரவைப்பதற்காக, அடிப்பது போல் ‘ஆக்டிங்’ செய்தோம் என்று எஸ்.பி சரோஜ் குமார் தாகூர் விளக்கம் அளித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் அருகே கோபசந்திரம் சின்ன திருப்பதி கோயில் திருவிழாவை முன்னிட்டு, எருதுவிடும் விழா ஏற்பாடு செயய்ப்பட்டது. இதற்கு மாவட்ட நிர்வாகம் வியாழக்கிழமை (பிப்ரவரி 2) தடைவிதித்தது.
இதனால், எருதுவிடும் விழா போட்டிக்காக, தர்மபுரி, கிருஷ்ணகிரி, கர்நாடகா, ஆந்திரா எனப் பல பகுதிகளிலிருந்து வந்திருந்த, 800-க்கும் மேற்பட்ட இளைஞர்கள், கிருஷ்ணகிரி – பெங்களூரு சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் 10 கிலோமீட்டருக்கு மேல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் எருது விடும் விழாவுக்கு அனுமதி அளித்ததைத் தொடர்ந்து, அங்கே கூடியிருந்தவர்கள் கலைந்து சென்று திருவிழாவை நடத்தினர்.
ஆனால், சில இளைஞர்கள் மாவட்டம் முழுவதும் எருது விடும் விழாவுக்கு தடை விதிக்கக் கூடாது என்று கோரிக்கை வைத்து மறியலில் ஈடுபட்டனர். சிறிது நேர்த்திலே கலவரமாக மாறியது. இதில், அரசு, தனியார் பேருந்துகளின் கண்ணாடிகளை உடைத்து, போலீஸார் மீது கற்கள் வீசித் தாக்கினர். வன்முறையில் ஈடுபட்டவர்களைக் கலைக்க போலீஸார் கண்ணீர் புகை குண்டு வீசி, தண்ணீரை பீய்ச்சியடித்து கூட்டத்தை கலைத்தனர். வன்முறையில் ஈடுபட்டதாக 200 பேரை போலீஸார் கைது செய்தனர்.
அப்போது போராட்டத்தில் கைதுசெய்யப்பட்ட ஒரு இளைஞரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரோஜ் குமார் தாகூர் லத்தியால் தாக்கி, காலில் உதைக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. மாவட்ட எஸ்.பி-யின் இந்தச் செயலையும்; வன்முறையில் ஈடுபட்ட இளைஞர்களையும் பலரும் கண்டித்து வருகின்றனர்.
இந்த நிலையில், இளைஞரை பூட்ஸ் காலால் உதைத்தது குறித்து, எஸ்.பி சரோஜ் குமார் தாகூர் விளக்கம் அளித்துள்ளார்.
வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், வெளிமாநிலத்திலிருந்து வந்த ஒருவர், பெண் போலீஸிடம் தவறாக நடந்து கொண்டார். அவரை கைது செய்தபோது சிலர் போலீஸைத் தாக்க வந்தனர். அவர்களை அங்கே அமரவைப்பதற்காக, அடிப்பது போல் ‘ஆக்டிங்’ செய்தோம் என்று எஸ்.பி சரோஜ் குமார் தாகூர் விளக்கம் அளித்துள்ளார்.
எஸ்.பி சரோஜ் குமார் தாகூர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “நேற்று எருது விடும் விழாவுக்கு, வெளிமாநிலங்களிலிருந்து அதிகப்படியான இளைஞர்கள் வந்திருந்தனர். போராட்டம் நடந்தபோது அவர்கள் உள்ளூர் மக்களிடம் வாக்குவாதம் செய்து தகாத வார்த்தைகள் பேசியிருக்கின்றனர். வெளிமாநிலத்திலிருந்து வந்த இளைஞர் ஒருவர் கூட்டத்திலிருந்த பெண் போலீஸிடம் தவறாக நடந்து கொண்டார். கைதானபோது அவர்கள் அந்தப் பகுதியில் அமராமல், அங்குமிங்கும் சென்றதுடன் போலீஸைத் தாக்க வந்தனர்.
அவர்களை அங்கு அமரவைப்பதற்காக, அடிப்பது போல் ‘ஆக்டிங்’ செய்தோம். அந்த இளைஞர் குறித்து விசாரிக்கிறோம். முழுத் தகவல் கிடைத்ததும் நடவடிக்கை எடுப்போம். இது போன்ற நிகழ்ச்சிகளுக்கு முறையான அனுமதி பெற்றால், போலீஸ் சார்பில் பாதுகாப்பு வழங்கப்படும், அமைதியான முறையில் நிகழ்ச்சி நடத்தலாம்” என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“