/indian-express-tamil/media/media_files/dDc42Rgdz5U62i67Mxna.jpeg)
தி.மு.க. ஆட்சியில் செயற்கை குடிநீர் தட்டுபாடு நிலவுவதாக எஸ்.பி. வேலுமணி குற்றஞ்சாட்டினார்.
Sp Velumani |அதிமுக தலைமை நிலைய செயலாளர், எஸ் பி வேலுமணி கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, “தமிழ்நாட்டில் தற்போது குடிநீர் பிரச்சனை தலைவிரித்து ஆடுவதாகவும், கோவை மாவட்டத்தில் நிலவும் குடிநீர் பிரச்சினை தீர்க்கக்கோரி, மாவட்ட ஆட்சியரிடம் ஏற்கனவே மனு கொடுத்துள்ளதாகவும், அதிமுக தொடங்கிய பில்லூர் மூன்றாவது குடிநீர் திட்டத்தை செயல்படுத்தாமல், திமுக அரசு முடக்கி வைத்துள்ளதாக குற்றஞ்சாட்டினார்.
மேலும், இதனால் கொங்கு பகுதியில் செயற்கையான குடிநீர் பஞ்சம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக கூறினார்.
தொடர்ந்து, மக்களுக்கு தேவையான குடிநீர் திட்டங்களை செயல்படுத்தி, குடிநீர் விநியோகத்தை சீராக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார். திமுக ஐடி குழுவினர் தவறான செய்திகளை பரப்புவதாகவும், அதனை ஊடகங்களும் செய்திகளாக பதிவிடுவதாகவும் அதிமுக"வின் பல்வேறு உக்கட்சி பூசல்கள் இருப்பதாக பல ஊடகங்கள் கற்பனையாக செய்திகள் வெளியிடுவதையும் கண்டித்தார்.
மேலும், அ.தி.மு.க இந்தியாவிலேயே மிகப்பெரிய கட்சி. எனக்கும் எடப்பாடி பழனிச்சாமிக்கும் கருத்து வேறுபாடு என்று எழுதுகின்றனர். எங்களுக்குள் எந்தக் குழப்பமும் கிடையாது. குழப்பம் செய்தவர்கள் எல்லாம் வெளியே போய்விட்டனர். ஓ.பி.எஸ், சசிகலா இணைப்பு சாத்தியமில்லை. கட்சியையும் ஆட்சியையும் சிறப்பாக வழிநடத்தி காப்பாற்றி வருபவர் எடப்பாடி பழனிச்சாமி என்றார். கட்சிக்குள் எந்த பிரச்சனை வந்தாலும், அனைத்து மூத்த நிர்வாகிகளிடமும் கலந்து ஆலோசித்த பின்பு, எடப்பாடி பழனிச்சாமி எந்த முடிவும் எடுப்பார் என்றார்.
கடந்த மூன்று ஆண்டு திமுக ஆட்சியில் எந்த திட்டங்களும் செயல்படுத்தப்படவில்லை என குற்றம் சாட்டிய எஸ் பி வேலுமணி, 2026 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியை பொறுப்பு ஏற்ற, உடன் மக்கள் நலத்திட்டங்கள் அனைத்தும் செயல்படுத்தப்படும் என்றார்.
செய்தியாளர் பி.ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.