கோவையில் நடைபெற்ற கோவில் திருவிழாவில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டு திருத்தேர் பவனியை துவக்கி வைத்து ஜமாப் இசைக்கு ஏற்ப பக்தர்களுடன் சேர்ந்து நடனமாடி அசத்தினார்.
கோவை சுகுணாபுரம் மைல்கல் பகுதியில் பழமை வாய்ந்த சக்தி வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ சக்தி மாரியம்மன் திருக்கோவில் உள்ளது. இந்த கோயில் திருவிழா வெகுவிமர்சியாக நடைபெற்று வருகிறது. அதன் ஒருபகுதியாக ஸ்ரீ சக்தி கரகம் மற்றும் ஸ்ரீ சக்திமாரியம்மன் தேர் பவனி நடைபெற்றது.
இந்த விழாவில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டு தேர் பவனியை துவக்கி வைத்து பக்தர்களுடன் ஜமாப் இசைக்கு ஏற்ப உற்சாக நடனமாடி ஊர்வலமாக நடந்து சென்றார்.
திருத்தேரானது, பி.கே.புதூர், கோவைப் புதூர் பிரிவு உட்பட பாலக்காடு பிராதன சாலை வழியாக ஊர்வலமாக சென்றது. மேலும் இந்த விழாவில் ஏராளமான பெண்கள் அம்மனுக்கு பால்குடம் எடுத்தும், முளைப்பாரிகள் எடுத்தும், பூ சட்டிகள் எடுத்தும் நேர்த்திக்கடன் செய்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“