கோவை அதிமுக தலைமை அலுவலகத்தில் கோவை புறநகர் தெற்கு, மாநகர், புறநகர் வடக்கு மாவட்டங்கள் சார்பில் செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி உட்பட மற்றும் 9 சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் பேசிய எஸ்.பி.வேலுமணி, "தி.மு.க ஆட்சியை அகற்ற, அ.தி.மு.க மீண்டும் ஆட்சியை பிடிக்க அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு முழுவதும் உள்ள 234 தொகுதி சுற்றுப்பயணம் கோவையிலிருந்து தொடங்க உள்ளார்.
/indian-express-tamil/media/post_attachments/7e4e2cc5-267.jpg)
வரும் 31 ஆம் தேதி அன்னூரில் நடக்கும் விவசாயிகள் மாநாட்டில் கலந்து கொண்டு சுற்றுப்பயணத்தை துவக்குகிறார். அ.தி.மு.க-விற்கு கோவை மாவட்டம் ராசியான மாவட்டம். அதனால் தான் எடப்பாடியார் கோவையில் சுற்று பயணத்தை துவங்குகிறார்.
நாம் 50 ஆண்டுகள் இல்லாத வளர்ச்சியை கொடுத்துள்ளோம். சுற்றுப்பயணம் 31 ஆம் தேதி 3 மணிக்கு துவங்கும். மிக பெரிய அளவில் வரவேற்பு இருக்க வேண்டும்.ஆர்.எஸ்.புரம் பகுதியில் எடப்பாடியார் சாலையில் நடந்தே வருகிறார். தொடர்ந்து தெற்கு மற்றும் சிங்காநல்லூரில் தொகுதியில் 1 ஆம் தேதி பேசுகிறார். கவுண்டபாளையம் வடக்கு தொகுதியில் பயணம் மேற்கொள்கிறார்.
தி.மு.க ஆட்சியை அவமானப்படுகிறோம். இன்று 2 கோடி உறுப்பினர்களாக எடப்பாடியார் உயர்த்தியுள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடியா, ராகுல் காந்தியா என பார்த்து தான் ஓட்டு போட்டனர். இரட்டை இலை அ.தி.மு.க-வின் பிரம்மாஸ்தரம் என நடிகர் ரஜினி கூறினார்.
இரட்டை இலை இருக்கும் வரை அ.தி.மு.க-வை யாரும் ஏதும் செய்ய முடியாது. நாடாளுமன்ற தேர்தலில் போது எடப்பாடியார் சர்வே எடுத்தார். சிலரது பதவிகள் மாறினால் ஏற்றுக்கொள்ள வேண்டும். அம்மா இருக்கும் போது எனது பதவியையே எடுத்து விட்டு வெரும் உறுப்பினராக மாற்றினார்கள். இக்கட்சி ராணுவம் மாதிரி தான். அம்மா இருந்த போது எப்படி இருந்தீர்களோ அதே போல இருக்க வேண்டும். அ.தி.மு.க விட பெரிய கட்சி தமிழகத்தில் இல்லை என தெரிவித்தார்.
தொடர்ந்து தொண்டர் ஒருவர் பேசுகையில் எடப்பாடி பழனிச்சாமி வரும் பிப்ரவரி 9ஆம் தேதி வருவதாகவும், அன்னூரில் நடக்கும் விவசாயிகளில் மாநாட்டில் கலந்து கொண்டு பிரச்சாரத்தை துவக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.