Advertisment

'என்றென்றும் அ.தி.மு.க': வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த வேலுமணி; வழிமொழிந்த செங்கோட்டையன்

#என்றென்றும்_அதிமுககாரன் என்ற ஹேஷ்டேக் உடன் பழைய புகைப்படத்தை பகிர்ந்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி; வழிமொழிந்த முன்னாள் அமைச்சர் கே.ஏ செங்கோட்டையன்

author-image
WebDesk
New Update
கேளிக்கை வரி ரத்து இல்லை; மாலை மீண்டும் பேச்சுவார்த்தை-அமைச்சர் தகவல்

#என்றென்றும்_அதிமுககாரன் என்ற ஹேஷ்டேக் உடன் பழைய புகைப்படத்தை பகிர்ந்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி; வழிமொழிந்த முன்னாள் அமைச்சர் கே.ஏ செங்கோட்டையன்

பா.ஜ.க கூட்டணியிலிருந்து அ.தி.மு.க வெளியேறியது அரசியல் வட்டாரத்தில் பல்வேறு விவாதங்களை கிளப்பியுள்ள நிலையில், அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி 'என்றென்றும் அ.தி.மு.க.,காரன்' என ட்வீட் செய்துள்ளார். இதனை முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் வழிமொழிந்துள்ளார்.

Advertisment

பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து அண்மையில் அ.தி.மு.க வெளியேறியது. தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலையுடனான மோதலைத் தொடர்ந்து கூட்டணி முறிந்ததாக அ.தி.மு.க அறிவித்தது.

ஆனால் இந்த கூட்டணி முறிவு தற்காலிகமானது, விரைவில் இரண்டு கட்சிகளும் இணைவார்கள். அதுமட்டுமில்லாமல் கூட்டணி முறிவுக்கு வேறு காரணங்கள் உள்ளன என்று அரசியல் விமர்சகர்களில் சிலர் கூறி வந்தனர்.

இதனையடுத்து சில நாட்களுக்கு முன், 2024 லோக்சபா தேர்தலில் மட்டும் அல்ல, 2026 சட்டசபை தேர்தலிலும் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அ.தி.மு.க இடம் பெறாது. அ.தி.மு.க தலைமையில் தனி கூட்டணிதான் அமைப்போம் என திட்டவட்டமாக முன்னாள் அமைச்சர் கே.பி முனுசாமி தெரிவித்தார்.

இருப்பினும், கூட்டணி முறிவை முழுமையாக ஏற்றுக்கொள்ளாத அரசியல் விமர்சகர்கள், பா.ஜ.க கூட்டணியிலிருந்து சிவசேனா விலகிய நிலையில், அக்கட்சியில் ஏக்நாத் ஷிண்டே வெளிவந்ததுபோல், அ.தி.மு.க.,விலும் ஷிண்டே வெளிவரலாம் என்றும் கூறிவருகின்றனர்.

இந்த நிலையில் அ.தி.மு.க மூத்த தலைவர்களில் ஒருவரான எஸ்.பி வேலுமணி இன்று தனது எக்ஸ் தளத்தில், #என்றென்றும்_அதிமுககாரன் என்ற ஹேஷ்டேக்குடன், ஆரம்ப காலத்தில் அ.தி.மு.க கொடி கட்டிய சைக்கிள் ஊர்வலத்தில் பங்கேற்ற ஒரு படத்தைப் பதிவிட்டுள்ளார். இந்த ட்வீட் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதப் பொருளானது.

இந்தநிலையில், அ.தி.மு.க.,வின் மற்றொரு முன்னாள் அமைச்சரான கே.ஏ.செங்கோட்டையன் இதனை வழிமொழிந்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், முதல்வர் ஜெயலலிதாவுடன் 1990 தொடக்கத்தில் எடுத்த போட்டோ ஒன்றை இந்த ஹேஷ்டேக்கில் பகிர்ந்துள்ளார்.

மேலும், அ.தி.மு.க.,வின் இரண்டாம் கட்ட தலைவர்களும் இந்த ட்வீட்களுக்கு ஆதரவாக #என்றென்றும்_அதிமுககாரன் என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Admk Sp Velumani
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment