சமீபத்தில் வெளியான ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தில் இஸ்லாமியருக்கு எதிராக உள்ள காட்சிகளை நீக்கவேண்டும் என முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து, கட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அவர், “எந்த படமும் எந்த மதத்தையும் புண்படுத்த கூடாது”, என்று தெரிவித்தார். கடந்த அதிமுக ஆட்சியில், கமலஹாசன் நடித்த விஸ்வரூபம் படத்தில், இஸ்லாமிய அமைப்புகள் எதிர்த்த காட்சிகள் நீக்கப்பட்டு வெளியிடப்பட்டதாக குறிப்பிட்டார்.
அதே போல், ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தில், இஸ்லாமியர்களுக்கு எதிராக உள்ள குறிப்பிட்ட காட்சிகளை நீக்கிவிட்டு வெளியிட வேண்டும் என்றும் தெரிவித்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil