கோவை தென்னமநல்லூர் பகுதியில் குச்சி ஆட்டம் 5-வது அரங்கேற்ற விழாவில் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வேலுமணி பங்கேற்று நடனம் ஆடினார்.
கோவை தொண்டாமுத்தூரில், தென்னமநல்லூர் முருகன் குச்சி ஆட்டக் கலைக் குழு நடத்திய 5-வது அரங்கேற்ற விழா தென்னமநல்லூர் அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில் வளாகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டார். பின்னர் அவருக்கு கோவிலில் முதல் மரியாதை அளிக்கப்பட்டு பூரண கும்ப மரியாதை செய்யப்பட்டது.
பின்னர் கலைஞர்களுக்கு உற்சாகமூட்டும் வகையில் குச்சி ஆட்ட குழுவினருடன் சேர்ந்து சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வேலுமணி நடனம் ஆடினார். பின்னர் அக்கலை குழுவினருடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டு எல்லா கலைஞர்களையும் வாழ்த்தினார்.
மேலும் இவ்விழாவில் தென்னமநல்லூர் மற்றும் சுற்றியுள்ள கிராம பொதுமக்கள் திரளாக வந்து இக்கலை குழுவினரின் குச்சி ஆட்டத்தை கண்டு ரசித்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“