Sp Velumani | Aiadmk | Lok Sabha Election | பாராளுமன்ற தேர்தலுக்கான அ.தி.மு.க வேட்பாளர் பட்டியல் முழுமையாக வெளியாகி உள்ளது. இந்த நிலையில் சென்னையிலிருந்து விமானம் மூலம் கோவை வந்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணிக்கு கோவை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த எஸ்.பி வேலுமணி, கோவை பாராளுமன்ற தொகுதிக்கு ராமச்சந்திரன் அவர்களையும் பொள்ளாச்சி தொகுதிக்கு கார்த்திக் அப்புசாமியையும் நீலகிரி பாராளுமன்றத்திற்கு லோகேஷ் தமிழ்ச்செல்வனையும் அறிவித்துள்ளார்கள்.
40 தொகுதிகளுக்கும் விளவங்கோடு இடைத்தேர்தலுக்கும் சேர்த்து வேட்பாளர் அறிவித்துள்ள நிலையில் அ.தி.மு.க. மிகப்பெரிய வெற்றி பெறும்.
கோவை, பொள்ளாச்சி, நீலகிரி உள்ளிட்ட மூன்று பாராளுமன்ற தொகுதிகளிலும் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி ஆகியோர் முதலமைச்சராக இருந்து பல்வேறு திட்டங்களை கொடுத்துள்ளனர்.
கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சியை கொடுத்து இன்று அத்திக்கடவு அவினாசி திட்டம், ஸ்மார்ட் சிட்டி, கூட்டக் குடிநீர் திட்டங்கள், பாலங்கள், சாலைகள், அதிகமான கல்லூரிகள் என பல்வேறு சாதனைகளை செய்துள்ளனர்.
கடந்த மூன்று ஆண்டுகளாக திமுக அரசு எந்த திட்டத்தையும் இங்கே கொண்டு வரவில்லை; பொதுமக்கள், இன்று தெளிவாக உள்ளனர். அவர்கள் அ.தி.மு.க வேட்பாளர்களுக்குதான் வாக்களிப்பார்கள்.
இந்த வெற்றி வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் எதிரொலித்து எடப்பாடியார் மீண்டும் முதலமைச்சராக வருவார். மேலும், தி.மு.க. கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாது” என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“