கோவை அ.தி.மு.க மாவட்ட அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தலைமையில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.
அ.தி.மு.க-வின் 51 வது ஆண்டு விழாவை கொண்டாடுவது குறித்து நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் 300க்கும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இதனை தொடர்ந்து முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் அப்போது அவர் கூறியதாவது:
ஒவ்வொரு குடும்பத்திலும் அ.தி.மு.க கொண்டு வந்த திட்டங்கள் இருக்கின்றது. தி.மு.க முதல்வர் ஸ்டாலின் எந்த திட்டத்தையும் கொண்டு வரவில்லை. கோவையில் 50 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சியை அ.தி.மு.க கொடுத்தது எனவும், இப்போது கோவையில் எந்த சாலையிலும் மக்கள் செல்ல முடியாத நிலையில் இருக்கின்றது. மாநகராட்சி நெடுஞ்சாலைகள் மோசமாக இருக்கின்றது.
இந்த ஆட்சி்மாற வேண்டும் எனவும், இந்த ஆட்சியை வீட்டிற்கு அனுப்பவும் மக்கள் முடிவு செய்து விட்டனர் எனக்கூறிய அவர், நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க வெல்லும் எனவும்
எடப்பாடியாரே முதல்வராக இருக்கலாம் என மக்கள் நினைக்கின்றனர் எனக்கூறிய அவர், இங்கே எப்போதும் இரு மொழிகொள்கைதான், தமிழகத்தில் இந்தி விவகாரத்தில் எந்த பிரச்சினையும் இல்லை என பா.ஜ.க தலைவர் தெளிவுபடுத்தியுள்ளார் எனக்கூறிய அவர்,
பா.ஜ.க தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தி இருக்கின்றது.
தி.மு.க-வினர் நடத்தும் பள்ளிகளில் இந்தியை எடுக்க சொல்ல வேண்டும். நாளைக்கு கோவை வரும் மத்திய விவசாயதுறை அமைச்சரை சந்தித்து , உரம், கொப்பரை தேங்காய் விவகாரம் குறித்து மனு அளிக்கப்படும்
தமிழகத்தின் 39 எம்.பிகள் எதுவுமே செய்வது இல்லை என குற்றசாட்டினர். மேலும், காவிரி பிரச்சினைக்காக நாடாளுமன்ற அதிமுக எம்.பிகள் முடக்கினர் இப்ப இருக்கின்ற எம்.பிக்கள் நாடாளுமன்றத்தில் சீட்டை தேய்த்துவிட்டு வருகின்றனர் எனவும் யாரையும் கட்டுப்படுத்த முடியாத முதல்வராக ஸ்டாலின் இருக்கின்றார் முதல்வருக்கு கட்டுப்படாதவர்களாக அந்த கட்சியினரும் இருக்கின்றனர் எனவும் எஸ்.பி. வேலுமணி தெரிவித்தார்.
செய்தி: பி.ரஹ்மான் கோவை மாவட்டம்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“