Advertisment

4 லாரிகளில் ரூ. 50 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்களை அனுப்பி வைத்த எஸ்.பி. வேலுமணி

சென்னை மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு  முன்னாள் அமைச்சரும் அ.தி.மு.க தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி, 4 லாரிகளில் ரூ. 50 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்களை அனுப்பி வைத்தார்.

author-image
WebDesk
New Update
SP Velumani sends relief

4 லாரிகளில் ரூ. 50 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்களை அனுப்பி வைத்த எஸ்.பி. வேலுமணி

சென்னை மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு  முன்னாள் அமைச்சரும் அ.தி.மு.க தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி, 4 லாரிகளில் ரூ. 50 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்களை அனுப்பி வைத்தார்.

Advertisment

கோவை சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நீலாம்பூரில் இருந்து 5 லாரிகளில் 50 லட்சம் மதிப்பீட்டில் நிவாரண பொருட்கள் அனுப்பும் நிகழ்வு முன்னாள் அமைச்சரும் அதிமுக  தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினர்  எஸ்.பி.வேலுமணி தலைமையில் நடைபெற்று வருகிறது. 

வாகனத்தில் பிரட் 50,ஆயிரம், ரவுண்ட்பன் 25 ஆயிரம்,பிஸ்கட் 50,ஆயிரம் சப்பாத்தி 30 ஆயிரம், நவீன குளுரூட்டும் வாகன வசதியுடன்  பால் அரை லிட்டர்,  50 ஆயிரம் பாக்கட், 300 எம்.எல், வாட்டர் பாட்டில்  ஒரு லட்சம், ஒரு லிட்டர் வாட்டர் பாட்டில்  ஒரு லட்சம் பாட்டில் ,டீத்தூள் ஐந்து, டன் அரிசி 50 டன். 

மேலும் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை அனுப்பி வைத்தார்.  மேலும் கொண்டு செல்லப்படும் நிவாரண பொருட்களின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி. வேலுமணி கூறியதாவது:

மழை வெள்ளத்தால் சென்னை மிகப் பெரிய பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. உடனடியாக பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து நிவாரண பொருட்களை கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி  வழங்கினார். 

அதேபோன்று அதிமுக நிர்வாகிகளும் வழங்க வேண்டும் என தெரிவித்திருந்தார். அதன் அடிப்படையில் கோவை மாவட்டம் அ.தி.மு.க சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது.

இந்த பாதிப்புக்கு காரணம் கடந்த 2015"ஆம் ஆண்டு கூட ஜெயலலிதா முதல்வராக இருக்கும்போது ஏற்பட்ட பாதிப்பு குறித்து தவறான தகவல்களை பொதுமக்களிடம் பரப்பியது திமுக 

செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணியை திறந்து விட்டதுதான் இதற்கு காரணம் என கூறியது.

செம்பரம்பாக்கம் ஏரிய பொழுது மட்டில் 35"ஆயிரம் கன அடி தண்ணீர் தான் வெளியேறும் அதற்குப் பின்னால் 150 ஏரிகளுக்கு மேல் வெளியேறிய தண்ணீர் அதிகளவு வெளியேறியதன் காரணமாக வெள்ளம் ஏற்பட்டது 

அப்போது அதிக அளவில் தாம்பரத்தில் 51" சென்டிமீட்டர் மழை பெய்தது அப்போது ஏற்பட்ட வெள்ள பாதிப்புக்காக ஒவ்வொரு பகுதிகளிலும் பொறுப்பாளர்களை நியமித்து அவர்கள் அதனை கண்காணித்து வந்தனர்.

சென்னை பொறுத்தமட்டில் வருடா வருடம் இந்த மாதத்தில் மழை வருவது வழக்கம் அதை கருத்தில் கொண்டு அரசாங்கம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் கடந்த ஆட்சி காலங்களில் தொடர்ந்து ஆய்வு கூட்டங்கள் நடத்தப்பட்டது 

தொடர்ந்து ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை நியமித்து தொடர்ந்து மேற்பார்வை செய்யப்பட்டது கடந்த ஆட்சி காலங்களில் ஆகஸ்ட் மாதமே இதற்கான உத்தரவு முதல்வரால் போடப்பட்டு பணிகள் முடக்கிவிடப்படும், தற்போது அதற்கான உத்தரவும் போடப்படவில்லை குளங்களும் தூர்வாரப்படவில்லை, எப்போது மழை வந்தாலும் எங்கள் ஆட்சி காலத்தில் பம்பு செட்டுகள் தயாராக வைக்கப்படும் 1500 "க்கும் மேற்பட்ட பம்பு செட்டுகள் தயார் நிலையில் எப்போதும் இருக்கும் தனியார் அமைப்புகளுடன் இணைந்து ராட்சச மோட்டார்கள் தனியார் அமைப்புடன் இணைந்து மீட்பு பணிகள் மேற்கொள்ளப்படும் அனைத்து வகையான எந்திரங்களும் தயார் நிலையில் வைத்திருக்கப்படும் பல உலக வங்கிகள் மூலமாக மீட்பு பணி நிதிகள் வாங்கப்பட்டது முன்னாள் முதல்வர் பழனிச்சாமி அவர்கள் அந்த நிதிகளை பெற்றுக் கொடுத்தார். 

முறைப்படி திட்டமிட்டு திமுக எந்த பணியும் செய்யவில்லை முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கவில்லை 2015"ஆம் ஆண்டு இரண்டு லட்சம் டன் குப்பைகளை அள்ளி அப்புறப்படுத்தியது அதிமுக, கடந்த ஆட்சி காலத்தில் அம்மா உணவகம் மூலமாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது 

அதனை முற்றிலுமாக முடக்கி இருக்கிறார்கள், சென்னையை திமுக மீட்டியுள்ளதா என்பது மக்களுக்கு தெரியும் வாட்ஸ் அப் குரூப் தகவல் தொழில்நுட்ப பிரிவுகளை வைத்துக்கொண்டு என்ன வேண்டுமானாலும் எழுதலாம் அதனைப் பயன்படுத்தி திமுக அரசியல் செய்து வருகிறது என தெரிவித்தார்.

செய்தி: பி. ரஹ்மான்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Sp Velumani
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment