கோவை குனியமுத்தூர் பகுதி கழக அலுவலகத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 75 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு 22 வது வருடமாக பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவ மாணவர்களுக்கு இலவச வினா விடை வங்கி புத்தகத்தை முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி வழங்கினார்.
மேலும் கோவை அரசு சட்டக் கல்லூரியில் பயின்று வரும் 15 க்கும் மேற்பட்ட மாணவர்கள் அமைச்சர் முன்னிலையில் தங்களை அதிமுகவில் இணைத்து கொண்டனர். அவர்களுக்கு சட்ட புத்தகங்களை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.
இந்த விழாவில் குனியமுத்தூர் பகுதி கழகச் செயலாளர் மதனகோபால் அவைத்தலைவர் எஸ் எம் உசேன். வார்டு செயலாளர்கள் ஜெகன் மற்றும் வடிவேல் உட்பட அதிமுகவினர் கலந்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி கூறியதாவது.
இந்த புத்தகம் தயார்படுத்த ஆறுமாதமாக அனுபவமிக்க ஆசிரியர்களை வைத்து தயாரிக்கின்றோம்,மேலும் இதற்க்கு முன்பு இந்த புத்தகத்தை பெற்றுக்கொண்ட மாணவர்கக் தேர்வில் 90 க்கும் மேற்பட்ட மதிப்பெண்கள் பெறுவதற்கு உதவியாக இருந்ததாக தெரிவித்துள்ளனர்.அம்மா அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு புத்தகங்கள் வழங்கி வருகிறோம்.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் சிறப்பாக பணியாற்றிய கழகத்தோழர்களுக்கு நன்றிகளை தெரிவித்தவர்,ஈரோடு கிழக்கு சட்டமன்ற தேர்தலை பொருத்தளவு நம்மை பார்த்து பயந்துதான் அனைத்து அமைச்சர்களும் களம் இறங்கி முறைகேடுகளால் வெற்றி பெற்றுள்ளார்கள் என குற்றம்சாட்டியவர்,வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக மாபெறும் வெற்றியை பெறுவார்கள் என தெரிவித்தார்.
மாணவர்கள் பெற்றோர்களின் கஷ்ட்டங்களை புரிந்துகொண்டு நன்றாக படித்து வாழ்க்கையில் வெற்றிபெற வேண்டும் என்று கேட்டுகொண்டார்.
செய்தி: பி.ரஹ்மான், கோவை
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“