/tamil-ie/media/media_files/uploads/2023/08/tamil-indian-express-2023-08-25T145103.592.jpg)
எஸ்.பி வேலுமணி வீட்டு திருமணத்தில் 7000 ஆடுகள் வெட்டப்படுவதாக எழுந்த செய்திகள் குறித்த எஸ்.பி. வேலுமணி பதிலளித்தார்.
SP Velumani house wedding: அ.தி.மு.க 52ஆவது ஆண்டு தொடக்க விழாவையொட்டி கோவை மாவட்ட கட்சி அலுவலகத்தில் கட்சிக் கொடி ஏற்றி தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன. அப்போது செய்தியாளர் ஒருவர் நீங்கள்தான் அ.தி.மு.க.வின் ஏக்நாத் ஷிண்டே வா? எனக் கேள்வியெழுப்பினார்.
இதற்குப் பதிலளித்த எஸ்.பி. வேலுமணி, “நான் பரம்பரை அ.தி.மு.க.காரன். எடப்பாடியார் என் தலைவர். நான் ஏக்நாத் ஷிண்டே கிடையாது.
”சிவசேனா கட்சிக்கு ஏக்நாத் ஷிண்டே செய்தது மிகப்பெரிய துரோகம்” என்றார். மேலும் பேச்சுக்கு பேச்சு, எடப்பாடி பழனிசாமியை எடப்பாடியார், எடப்பாடியார் என்றே அழைத்தார்.
தொடர்ந்து தமது வீட்டில் நடைபெற உள்ள திருமணத்துக்கு 7 ஆயிரம் ஆடுகள் வெட்டப்படுவதாக வெளியான தகவலுக்கு மறுப்பு தெரிவித்த எஸ்.பி வேலுமணி, “எங்கள் வீட்டில் திருமண ஏற்பாடுகள் நடக்கும்போது நாங்கள் அசைவம் சாப்பிட மாட்டோம்” என்றார்.
மேலும், கோவை பகுதியில் திருமணத்தின்போது சைவம் மட்டுமே விருந்தாக அளிக்கப்படும் என்றும் யாரோ தவறான தகவலை கிளப்பி விடுகின்றனர் எனவும் பதிலளித்தார்.
தொடர்ந்து அதிமுகவில் ஏற்பட்டுள்ள குழப்பங்களுக்கு திமுகதான் காரணம் எனக்கூறிய எஸ்.பி. வேலுமணி, “திமுக நினைப்பது போல் எதுவும் நடக்க போவதில்லை. எடப்பாடியார்தான் என் தலைவர். நாங்கள் அவர் பின்னால் நிற்போம்” என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.