/tamil-ie/media/media_files/uploads/2019/05/2b.jpg)
இந்தியாவில் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் ராக்கெட் ஏவுதளம் உள்ளது. இந்தியாவின் ஒரே ராக்கெட் ஏவுதளம் இதுவாகும். இந்நிலையில் இதைத் தொடர்ந்து தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் 2-வது ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது.
இதற்காக குலசேகரன்பட்டினம் சுற்று வட்டார பகுதியில் கடலோரத்தில் அரைவட்ட வடிவில் 2,376 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு, ரூ.950 கோடி செலவில் அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து தமிழக அரசு குலசேகரன்பட்டினத்தில் விண்வெளி பூங்கா அமைக்கப்படும் எனத் தெரிவித்தது.
இந்த நிலையில், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகம் (டிட்கோ), அமைப்பதற்கு இஸ்ரோவின் இன்ஸ்பேஸ் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. குலசேகரன்பட்டினத்தில் 1,500 ஏக்கர் பரப்பில் விண்வெளி ஆய்வு மையத்திற்கு அருகில் விண்வெளி தொழிற்சாலை, உந்துசக்தி பூங்கா அமைய உள்ளது. இதற்காக விண்வெளி பூங்கா அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்தப்பட்டு வருவதாக டிட்கோ தெரிவித்துள்ளது.
ராக்கெட் உதிரிபாகங்களை தயாரிப்பது, மின்னணு, பொறியியல் கட்டமைப்புகள் மற்றும் ராக்கெட் தொடர்பான பல்வேறு கட்டமைப்புகளை உருவாக்கிட இந்த தொழிற்சாலை மற்றும் மற்றும் உந்துசக்தி பூங்கா பயன்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து டிட்கோ கூறுகையில், இந்த முயற்சியானது உலக முதலீட்டாளர்களை குறிப்பாக தமிழ்நாட்டின் குலசேகரப்பட்டினத்தில் விண்வெளி துறையில் பங்கேற்க வைக்கும் முயற்சி ஆகும். இந்த பூங்கா விண்வெளி ஆராய்ச்சி, அதன் மேம்பாடு மற்றும் தொழில்துறை ஒத்துழைப்புக்கான மையமாக செயல்படும். இது உலகளாவிய விண்வெளி அரங்கில் தமிழகத்தின் நிலையை மேம்படுத்தும். இதன் மூலம் தேசிய பாதுகாப்பு மற்றும் உலகளாவிய விண்வெளி தொழில்நுட்பம் ஆகிய இரண்டிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்து இந்தியாவின் ஆற்றல்மிக்க மற்றும் முக்கிய மாநிலமாக தமிழகம் உருவெடுக்கும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.