அஜீத் நேரில் வரவில்லை என்பதை பிரச்னை ஆக்குவதா? எஸ்.பி.பி. சரண் கேள்வி

நான் எனது அப்பாவை இழந்தேன். உலகம் எஸ்பிபி என்ற பாடகரை இழந்தது.

By: Updated: September 28, 2020, 10:25:02 PM

எஸ்பிபி உடல் நல்லடக்கம் நிகழ்வில், நடிகர் அஜித் கலந்து கொள்ள வில்லை என்ற கருத்துக்கு அவரது மகன் சரண் விளக்கமளித்தார்.

எஸ்பிபி மருத்துவமனை செலவுகள் தொடர்பாக தவாறான வதந்திகள் வாட்ஸ்அப் மூலம் பரவி வருகின்றன.   இது தொடர்பாக எஸ்பிபி சரண் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, நடிகர் அஜித் இறுதி சடங்கு நிகழ்வில் கலந்து கொள்ளாது கேள்வி எழுப்பினர்.


அதற்கு, சரண் பதிலளிக்கையில்,” இதுபோன்ற சிலரின் கருத்துக்களுக்கு நான் ஏன் பதிலளிக்க வேண்டும்? அஜித் எனது நண்பர். அவர் என் அப்பாவுடன் நட்பாக இருந்தார். அஜித் கண்ணீர் அஞ்சலி செலுத்த வேண்டும் என்றால், அதை அவர்  வீட்டிலேயே செய்து கொள்வார். அவர் நேரில் வந்தாரா? இல்லையா? என்பது ஏன் முக்கியத்துவம் பெறுகிறது. அப்பாவின் இறுதிச் சடங்குகளில்  அவர் இல்லாததை ஏன் ஒரு பிரச்சினையாக மாற்ற விரும்புகிறீர்கள்? நான் எனது அப்பாவை இழந்தேன். உலகம் எஸ்பிபி என்ற பாடகரை இழந்தது. இயல்பு நிலைக்கு திரும்புவதற்கு சிறிது  காலம் தேவைப்படுகிறது. தயவுசெய்து  அதற்கு எங்களை அனுமதியுங்கள்” என்று தெரிவித்தார்.
முன்னதாக, மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியனின் உடலுக்கு நடிகர் விஜய் நேரில் அஞ்சலி செலுத்தினார். அதைத் தொடர்ந்து தொலைக்காட்சி தொகுப்பாளர் சுமந்த் ராமன் தனது ட்விட்டர் பதிவில், ” நடிகர் விஜய்- ஐவிட எஸ்பிபி- யால் பயனடைந்த பலரும் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளவில்லை, விஜயின் நடவடிக்கை வரவேற்கத்தக்கது” என்று தெரிவித்தார்.

சென்னை அருகே தாமரைப்பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு அவரது மகன் சரண் இறுதிச் சடங்குகளை செய்தார். குடும்பத்தினரும், நண்பர்களும் இறுதி அஞ்சலி செலுத்திய பின்னர், எஸ்பிபி உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

தமிழக காவல்துறையினர் 72 குண்டுகள் முழங்க எஸ்பிபிக்கு  மரியாதை  அளித்தனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Spb charan clarified about ajith not participating in spb rituals

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X