Advertisment

கருணாஸ் உட்பட 4 எம்.எல்.ஏ.க்கள் மீது கட்சித் தாவல் தடை சட்டத்தில் நடவடிக்கை? ரியாக்ஷன் என்னவாக இருக்கும்?

அவர்கள் மீது நடவடிக்கை ஏதும் எடுக்காமல் மன்னிப்பு அளிக்கப்படும் என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
கருணாஸ் உட்பட 4 எம்.எல்.ஏ.க்கள் மீது கட்சித் தாவல் தடை சட்டத்தில் நடவடிக்கை?

கருணாஸ் உட்பட 4 எம்.எல்.ஏ.க்கள் மீது கட்சித் தாவல் தடை சட்டத்தில் நடவடிக்கை?

டிடிவி தினகரன் அணிக்கு ஆதரவாக செயல்பட்ட 18 எம்.எல்.ஏ.க்கள், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக கவர்னரிடம் கடிதம் கொடுத்ததால், சபாநாயகர் 18 அவர்கள் பேரையும் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

Advertisment

இதை எதிர்த்து அவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதில் இருதரப்பு வாதங்களும் முடிந்து தேதி குறிப்பிடப்படாமல் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதன் தீர்ப்பு இன்னும் வெளிவராத சூழ்நிலையில் கருணாஸ், ரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகிய 4 எம்.எல்.ஏ.க்கள் மீது சபாநாயகர் நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளார் என்று கூறப்படுகிறது.

இதில், கருணாஸ் திருவாடனை தொகுதியிலும், பிரபு கள்ளக்குறிச்சி தொகுதியிலும், ரத்தினசபாபதி அறந்தாங்கியிலும், கலைச்செல்வன் விருத்தாசலம் தொகுதியிலும் வெற்றிப் பெற்றவர்கள். கருணாஸின் விவகாரம் நமக்கு தெரிந்ததே. ஆனால், கருணாஸ் தவிர்த்து மற்ற மூவரும் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட பிறகு தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார்கள்.

தினகரன் நடத்திய ஆலோசனைக் கூட்டங்களிலும் பொதுக்கூட்டங்களிலும் கலந்து கொண்டு முதலமைச்சருக்கு எதிராக பேசி வருகிறார்கள். இதனால் இந்த 3 எம்.எல்.ஏ.க்கள் மீதும் கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து, முதல்வர் மற்றும் துணை முதல்வரின் நீண்ட ஆலோசனைக்குப் பிறகு, 4 எம்.எல்.ஏ.க்கள் மீதும் கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் தகுதி நீக்க நடவடிக்கை எடுக்க சபாநாயகருக்கு அரசு கொறடா ராஜேந்திரன் சிபாரிசு கடிதம் கொடுத்தார். அத்துடன் 4 எம்.எல்.ஏ.க்களின் கட்சி விரோத நடவடிக்கைகளுக்கான ஆதாரங்களையும் சமர்ப்பித்தார்.

இதையடுத்து 4 எம்.எல்.ஏ.க்களிடமும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப சபாநாயகர் தனபால் முடிவு செய்துள்ளார். இது தொடர்பாகவே அவர் அட்வகேட் ஜெனரலுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். விரைவில் 4 பேருக்கும் நோட்டீஸ் அனுப்பப்படுகிறது. அதற்கு விளக்கம் அளிக்க எம்.எல்.ஏ.க்களுக்கு அவகாசம் அளிக்கப்படும்.

தங்கள் செயலுக்கு 4 பேரும் வருத்தம் தெரிவித்து பதில் கடிதம் அனுப்பினாலோ அல்லது சபாநாயகரை நேரில் சந்தித்து வருத்தம் தெரிவித்தாலோ அது ஏற்றுக் கொள்ளப்பட்டு, அவர்கள் மீது நடவடிக்கை ஏதும் எடுக்காமல் மன்னிப்பு அளிக்கப்படும் என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

அதேசமயம், இதில் பதில் அளிக்க மேலும் கால அவகாசம் கேட்கலாம். ஆனால் அவர்கள் பதில் அளிக்காமல் காலம் கடத்தினாலோ, தங்கள் செயலை நியாயப்படுத்தினாலோ 4 பேர் மீதும் கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க சபாநாயகருக்கு அதிகாரம் உண்டு. இதனால் எம்.எல்.ஏ. பதவி பறிபோகும் வாய்ப்பு உள்ளது.

Tamilnadu Mla Karunas
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment