/indian-express-tamil/media/media_files/AgeOlOIjwz4pmlDRtTUU.jpg)
காங்கிரஸ் கட்சிலிருந்து விலகி பா.ஜ.க-வில் இணைந்த விஜயதரணியின் ராஜினாமா கடிதத்தை ஏற்றுகொள்வதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
சபாநாயகர் அப்பாவு நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த போது, “ தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை, அரசியலமைபுச் சட்டத்தின்படி, காங்கிரஸ் கட்சியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட விஜயதரணி பா.ஜ.கவில் இணைந்துவிட்டார். இதனால் அவரை பதவி நீக்கம் செய்யக்கோரி சட்டப்பேரவைத் தலைவர் மற்றும் முதன்மைச் செயலருக்கும் கடிதம் அனுப்பி வைத்தார்.
இதைத்தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர் விஜயதரணியும், தனது பதவி விலகல் கடிதத்தினை தன்னுடைய கைபப்பட எழுதி, இணைய வழியில் என்னுடைய கவனத்துக்கும் சட்டப்பேரவையின் முதன்மை செயலரின் கவனத்துக்கும் அனுப்பினார். இந்த இரண்டு கடிதங்களின் விவரங்களை முதன்மைச் செயலர் எனக்கு அனுப்பி வைத்தார். இதை பார்த்தபோது, விஜயதரணி , முறைப்படிதன்னுடையகைப்பட பதவி விலகல் கடிதம் கொடுத்திப்பத்தை தெரிந்துகொண்டேன்.
விஜயதரணி இன்று காலை என்னை தொலைப்பேசியில் அழைத்து அந்த கடிதத்தை நாதான் எனது கைப்பட எழுதி அனுப்பிருந்தேன். பா.ஜ.க-வில் இணைந்துவிட்டதால், காங்கிரஸ் கட்சியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதாக என்னிடம் சொன்னார். அவரது பதவி விலகலை நான் ஏற்றுகொள்கிறேன். இதுதொடர்பான ஆவணங்கள் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்படும். விளவங்கேடு சட்டமன்றத் தொகுதி காலியாக இருப்பது குறித்து முறைப்படி அறிவிக்கப்படும்” என்று தெரிவித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.