2023 ஆம் ஆண்டிற்கான தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் ஜனவரி 9 ஆம் தேதி தொடங்கும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தமிழக சட்டப்பேரவையின் மழைக்காலக் கூட்டத்தொடர் கடந்த அக்டோபர் 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. அதன் பின்னர் தேதிக் குறிப்பிடாமல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்பட்டது.
இதையும் படியுங்கள்: பொங்கல் பரிசில் கரும்பை சேர்க்க வேண்டும்; திருச்சி ஆட்சியர் அலுவலகம் முன் விவசாயிகள் போராட்டம்
இந்தநிலையில், தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் ஜனவரி 9-ம் தேதி தொடங்கும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. 2023 ஜனவரி 9 ஆம் தேதி காலை 10 மணிக்கு ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.
ஜனவரி 9 ஆம் தேதி தொடங்கும் கூட்டத்தொடரை எத்தனை நாட்களுக்கு நடத்துவது என்பது குறித்து அலுவல் ஆய்வுக்குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும். கூட்டத்தொடரில் பங்கேற்கும் உறுப்பினர்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
மேலும், புதிதாக பொறுப்பேற்றுள்ள அமைச்சர் உதயநிதிக்கு அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கு அடுத்த இருக்கை வழங்கப்படும் என்றும் சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil