அமைச்சர்கள் குறித்து அவதூறு செய்தி: உரிமை குழுவுக்கு அனுப்பி வைத்த சபாநாயகர்

அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் குறித்து அவதூறு செய்தி வெளியிட்ட பத்திக்கை மீது, சட்டபேரவையில் அவை உரிமை மீறல் பிரச்னை கொண்டு வரப்பட்டது.

அப்பாவு

அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் குறித்து அவதூறு செய்தி  வெளியிட்ட பத்திக்கை மீது, சட்டபேரவையில் அவை உரிமை மீறல் பிரச்னை கொண்டு வரப்பட்டது.

சட்டப்பேரவையில் நேற்று வேல்முருகன் பேசுகையில். இந்த அவை மிக கண்ணியத்திற்குரிய, மாண்பிற்குரிய ஒரு அவை. நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் தமிழக மக்களுக்கான நிதிநிலை அறிக்கையை வாசித்தபோது அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் எங்கள் இருக்கைக்கு முன்னால் பொருத்தப்பட்டிருக்கிற கணினியை கீழ்நோக்கி, வரிகளை படித்துக் கொண்டிருந்தோம். ஆனால் ஒரு குறிப்பிட்ட பத்திர்க்கை தவறாக செய்தி வெளியிட்டுருக்கிறது.

இந்நிலையில் இந்த செய்தி அவையின் மாண்புகளை அவமதிக்கும் வகையில் வெளிவந்துள்ளது. இது பெரும் விவாதங்களை சமூகவலைதளங்களில் உருவாக்கி உள்ளது. இந்த அவையினுடைய மாண்புக்கு களங்கம் கற்பிக்கின்ற செய்தி வெளியிட்ட இந்த பத்திரிக்கையின் மீது இந்த அளவை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்ற உரிமை மீறலை 219-கீழ் கொண்டு வருகிறேன் என்றார்.

பேரவைத் தலைவர் அப்பாவு: இப்பிரச்சனையை மேலேழுந்தவரியாக பார்க்கும்பொது,  இதில் அவை உரிமை மீறல் இருப்பதாகத் தெரிந்தால், இப்பிரச்சனை குறித்து ஆய்ந்து, அறிக்கை அளிப்பதற்காக பேரவை விதி 226கீழ் அவை உரிமைக் குழுவிற்கு அனுப்புகிறேன் என்றார்.

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Speaker appavu on news about tn assembly

Exit mobile version