ஒரு காலத்தில் சனாதன தர்மத்தால் 7% மட்டுமே கல்விகற்றனர் என்று பட்டமளிப்பு விழாவில் சபாநாயகர் அப்பாவு பேசியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள செயிண்ட் ஆன்ஸ் கல்லூரியில் நேற்று பட்டமளிப்பு விழா நடைபெற்றது. ” இந்தியாவில் முன்பு ஒரு காலத்தில் சனாதன தர்மத்தால், 7 % மக்கள் மட்டுமே கல்வி கற்க முடியும். மேலும் குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டுமே நிலம் வாங்கும் நிலை இருந்தது. 1795ம் ஆண்டுதான் பிரிட்ஷ் நாட்டினர் இந்த சட்டத்தை மாற்றினார்கள். பாஜகவினர் வேண்டுமானால், சனாதன தர்மம் இந்த நாட்டை செழிமையாக்கியது என்று கூறலாம். நீங்கள் அனைவரும் இதை தெர்ந்துகொண்டுதான் ஆக வேண்டும். சனாதன தர்மம், அனைவரையும் சாதி என்ற பெயரால் பிரித்தது.
திராவிட மாடல் ஆட்சியில், பெரியார், அண்ணா, கருணாநிதி மற்றும் முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்டவர்களால் தமிழ்நாடு வளர்ச்சியடைந்துள்ளது.
நமது கல்வியமைப்புக்கு நீட் தேர்வு தேவையற்றது. டெல்லியில் போட்டியிடும் வேட்பாளரை ஆதரிப்பதன் மூலம், நீட் தேர்வை முதல்வர் ஸ்டாலின் நீக்க முடியும் என்று நான் நம்புகிறேன்.” என்று அவர் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil ”