Tamil Nadu Assembly session : தமிழக சட்டமன்றம் அக்டோபர் 9, 2023 அன்று (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு கூட்டப்படும் என்று சபாநாயகர் மு. அப்பாவு செப்டம்பர் 20 புதன்கிழமை அறிவித்தார்.
சட்டசபை கூட்டத்தொடரின் முதல் நாளில், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, 2023-24க்கான முதல் துணை பட்ஜெட் மதிப்பீடுகளை தாக்கல் செய்வார்; இந்த அமர்வு சுமார் ஐந்து நாட்களுக்கு நீடிக்கும் என்று வட்டாரங்கள் கூறுகின்றன.
இது தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த மு. அப்பாவு, “2023-2024ஆம் ஆண்டிற்கான சட்டப்பேரவை கூட்டத்தொடர் அக்டோபர் 9ஆம் தேதி காலை 10 மணிக்கு தலைமைச் செயலகத்தில் தொடங்கும்.
இந்த பேரவை கூட்டத் தொடர் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பது குறித்து அலுவல் ஆய்வு குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும்” என்றார்.
தொடர்ந்து, “33% மகளிர் இடஒதுக்கீடு மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டால் சட்டமன்றத்திலும் நிறைவேற்றப்படும்” என்றார்.
மேலும், “ஓபிஎஸ் இருக்கை குறித்து எந்தவிதமான விவாதமும் தற்போது எழவில்லை. அதனால் அதுகுறித்து பேச வேண்டிய அவசியம் இல்லை” என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“