Advertisment

சென்னை டூ பம்பை ரூ.1090 கட்டணம்.. சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு

The transport department has announced that express buses will be run between Chennai and Bombay from November 17 for the convenience of Sabarimala pilgrims | சபரிமலை செல்வோரின் வசதிக்காக சென்னை - பம்பை இடையே நவம்பர் 17ம் தேதி முதல் விரைவு பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Sabarimala temple to open pilgrimage on November 16

சபரிமலை செல்வோரின் வசதிக்காக சென்னை - பம்பை இடையே நவம்பர் 17ஆம் தேதி முதல் விரைவு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

Advertisment

இது குறித்து தமிழ்நாடு போக்குவரத்து துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “இந்தப் பேருந்துகள் சென்னையில் இருந்து பம்பைக்கு மதியம் 3.30 மணி மற்றும் 4 மணி என இரு சமயங்களில் இயக்கப்படுகின்றன.
இந்தப் பேருந்துகளில் பெரியவர்களுக்கு ரூ.1090ம், சிறியவர்களுக்கு ரூ.545ம் கட்டணமாக வசூலிக்கப்பட உள்ளது.

இந்தப் பேருந்து சேவைகள் ஜனவரி 18ஆம் தேதிவரை கிடைக்கும். பேருந்துகளின் இருக்கைகளை, www.tnstc.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
இதே போல், சென்னையில் இருந்து குமுளிக்கு மாலை 5.30 மணிக்கு வழக்கமாக இயக்கப்படும் பேருந்தையும் பக்தர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை-குமுளி பேருந்தில் பெரியவர்களுக்கு ரூ.575, சிறியவர்களுக்கு ரூ.288 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதேபோல், கேரளத்தின் பம்பை உள்ளிட்ட இடங்களில் இருந்தும் சபரிமலைக்கு நிமிடத்துக்கு நிமிடம் பேருந்து வசதி ஏற்பாடு செய்துள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Sabarimala
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment