சபரிமலை செல்வோரின் வசதிக்காக சென்னை – பம்பை இடையே நவம்பர் 17ஆம் தேதி முதல் விரைவு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இது குறித்து தமிழ்நாடு போக்குவரத்து துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “இந்தப் பேருந்துகள் சென்னையில் இருந்து பம்பைக்கு மதியம் 3.30 மணி மற்றும் 4 மணி என இரு சமயங்களில் இயக்கப்படுகின்றன.
இந்தப் பேருந்துகளில் பெரியவர்களுக்கு ரூ.1090ம், சிறியவர்களுக்கு ரூ.545ம் கட்டணமாக வசூலிக்கப்பட உள்ளது.
-
சபரிமலை சிறப்பு பேருந்துகள் கட்டண விவரம்
இந்தப் பேருந்து சேவைகள் ஜனவரி 18ஆம் தேதிவரை கிடைக்கும். பேருந்துகளின் இருக்கைகளை, http://www.tnstc.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
இதே போல், சென்னையில் இருந்து குமுளிக்கு மாலை 5.30 மணிக்கு வழக்கமாக இயக்கப்படும் பேருந்தையும் பக்தர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை-குமுளி பேருந்தில் பெரியவர்களுக்கு ரூ.575, சிறியவர்களுக்கு ரூ.288 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதேபோல், கேரளத்தின் பம்பை உள்ளிட்ட இடங்களில் இருந்தும் சபரிமலைக்கு நிமிடத்துக்கு நிமிடம் பேருந்து வசதி ஏற்பாடு செய்துள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil