சபரிமலைக்கு பக்தர்கள் செல்ல வசதியாக தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழம் சிறப்பு பேருந்துகளை இயக்க உள்ளது.
கேராளவில் உள்ள சபரிமலைக்கு வருடம் வருடம் பக்தர்கள் செல்வது வழக்கம். இந்நிலையில் அதிக மக்கள் சபரிமலைக்கு செல்வதால் தமிழ்நாடு எஸ்.இ.டி.சி, சபாரிமலைக்கு சிறப்பு பேருந்துகளை இயக்க உள்ளது. இன்று முதல் ஜனவரி 16ம் தேதி வரை இந்த பேருந்துகள் இயக்கப்படும்.
சென்னை, திருச்சி, மதுரை, புதுச்சேரி, கடலூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து சபரிமலைக்கு இயக்கப்படும். இந்நிலையில் தேவைக்கு ஏற்பட மற்ற இடங்களில் இருந்தும் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
பயணம் செய்ய விரும்புவோர் https://www.tnstc.in/home.html என்ற இணையதளத்தில் டிக்கெட் புக் செய்யலாம் அல்லது 9445014452 என்ற தொலை பேசி எண்ணுக்கு அழைக்கலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“