Mahalaya Amavasai Chennai Rameswaram Special Bus : மகாளய அமாவாசை வரும் 14 ஆம் தேதி சனிக்கிழமை வருகிறது. அன்றைய தினத்தில் பித்ருக்களுக்கு நீர் நிலைகளில் அமர்ந்து தர்ப்பணம் கொடுப்பது வழக்கம்.
இதற்காக பலர் காவிரி படித்துறைகளுக்கும், ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்திற்கும் செல்வார்கள். அது போல் ராமேஸ்வரத்திற்கு சென்று திதி கொடுத்துவிட்டு நீராடி பிண்டத்தை அக்னி தீர்த்தக் கடலில் கரைப்பார்கள்.
முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரியிலும் கூட்டம் அதிகமாக காணப்படும். இந்த நிலையில், மகாளய அமாவாசையை முன்னிட்டு வரும் 13ஆம் தேதி ராமேஸ்வரத்திற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
இந்தச் சிறப்பு பேருந்து சென்னை மற்றும் பிற இடங்களில் இருந்தும் ராமேஸ்வரத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மேலும் இந்தப் பேருந்துகள் சென்னை, சேலம், கோயம்புத்தூர் மற்றும் பெங்களூரு உள்ளிட்ட இடங்களில் இருந்து ராமேஸ்வரத்துக்கு இயக்கப்படுகின்றன.
அதேபோல் ராமேஸ்வரத்தில் இருந்து அக்.14ஆம் தேதி சென்னை, சேலம், கோயம்புத்தூர் மற்றும் பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளுக்கு இயக்கப்படுகின்றன.
இந்த வழித்தடங்களில் www.tnstc.in மற்றும் tnstc official app மூலமாகவும் முன்பதிவு செய்யப்படுகிறது. மேலும் இந்தச் சிறப்பு பேருந்துகளை கண்காணிக்க அலுவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த பேருந்து வசதியை பயணிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என போக்குவரத்து மேலான் இயக்குநர் விடுத்துள்ள அறிக்கையில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“